Posts

Showing posts from November, 2018

அன்புடன் நான்..

Image
மனிதனின் கற்பனா சக்தி அசாதரணமானது. அவனின் கற்பனைகளில் உதித்த பல படைப்புகளை நாம் இன்றும் ரசித்தும் அனுபவித்தும் வருகிறோம். கற்பனைக்குப் பஞ்சமில்லா காலங்களில் உருவான புராண இதிகாசங்கள் அதற்குச் சிறந்த சான்றுகள். மனிதன் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தான். ஓரிடத்திலிருந்து கொண்டே வேறோர் இடத்தில் நிகழும் சம்பவங்களைக் கண்கூடாக ரசிக்கக்கூடியவனாக இருந்தான் என்கின்றன இதிகாசங்கள். ஆனால் நடப்பு வாழ்க்கையில், அவை அதிசியக்கவைக்கும் ஆற்றல்கள் அன்று. ஒருவேளை அவை நிகழ்ந்தவையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும், ஒருவரின் கற்பனையில் உதித்தவையே அவ்வாற்றல்கள். ஆக, கற்பனையைப் பேழையில் பூட்டிவைப்பதை விட, கடைவிரிப்பதே சாலச் சிறந்தது. அதன் வழி உருவானதே “பேனா பேப்பர்”. வெறும் கற்பனையை மட்டும் காட்டாமல், என் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கவும், தமிழ்த் தாகத்தைத் தணிக்கவும் ஒரு தளம் தேவைப்பட்டது. அது உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என தோன்றியது. காகிதங்களிலும், சுவர்களிலும் கிறுக்கிய காலங்கள் உண்டு. அவை காணாமல் போனதும் உண்டு. எழுத்தின் ஊடே என் கற்பனைகளையும், உணர்வுகளையும், தமிழ்த் தாகத்தையும் பரவச் செய்ய எனக்குத் தேவைப

எப்பப்பா கல்யாணம்...?

Image
இப்போது எல்லாம் “அப்புறம்” என இழுத்தாலே போச்சுடான்னு ஆகிவிட்டது. “ பிறகு, உங்களுக்கு எப்போ கல்யாணம்? ” 25 வயதைக் கடந்தவுடன் எல்லோரும் அடிக்கடி கேட்கிற இந்த கேள்வி தான் என்னையும் சீண்டி பார்த்துக் கொண்டிருந்தது. “ என் கல்யாணத்துக்கு என்னங்க அவசரம்” இதுவும் வழக்கமாக எல்லோரும் சொல்லும் பதில்தான். அன்று எனக்கும் பயனாகியது... விழாக்களுக்குப் போனாலே இப்படித் தான். எல்லோருக்கும் யாரையாவது எதாவது கேட்க வேண்டும். சரி என்ன செய்வது, நண்பனுடைய மகனின் பெயர்ச் சூட்டு விழாவிற்கு வந்திருக்கிறோம், அமைதியைக் கடைப்பிடிப்போம் என இருந்து விட்டேன். அடடா, உங்களுக்கு என் நண்பனை அறிமுகப் படுத்த மறந்து விட்டேன். என் நண்பன் பெயர் தயாளன். நாங்கள் இருவரும் ஒரே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிறந்தது வளர்ந்தது ஒரே இடம் என்பதால், ஆரம்பப்பள்ளியில் இருந்தே இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தோம். இன்று அவனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. ம்ம்ம்.. முதல் மகன் என்பதால் பெயர்ச் சூட்டு விழாவை கோலாகலமாகாவே ஏற்பாடு செய்திருந்தான் தயாளன். ஆரம்பப் பள்ளியில் எங்களுடன் படித்த எல்லா நண்பர்களுக்கும் அழைப்பும் விடு