Posts

மழை நின்ற பின்பும் தூறல்

Image
திரைபடங்களில் காணாத மிக அழகான காட்சிகள் சில சமயம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும். இருளுக்கு மத்தியில் ஒளி வீசிக் கொண்டிருந்த முழுமதியும், இசையை நிறைவு செய்த நிசப்தமும்.. மனசுக்குப் பிடித்த ஒருவர் மிக அருகிலும், கைகளில் இரு கப் கோஃபியும், கண்களில் நிறைந்தோடிய காதலும், இதைவிட அழகான காட்சி இதுவரை கற்பனையிலும் கண்டதில்லை என்றிருந்தது.. காதல் .. உடல் எனும் தூரிகையின் வழி, உணர்வுகள் எனும் வர்ணங்களால் ஆன மிக அழகான ஓவியம். உணர்வுகள் நிலை மாறினால் அந்த ஓவியம் அலங்கோலமாகிறது. சரிபடுத்த முடியாத நிலையில் விழுகிறது..  காதலும் காவியம்தான், தொடக்கமும், நிறைவும் இருக்குமாயின். அந்த நிறைவு கூடலாக இருந்தால் சுபம். அதுவே ஊடலில் முடிந்தால் வலி மட்டுமே எஞ்சியிருக்கும். ஆனால் அந்த வலி கூட அன்று சுகமானதாக இருந்தது..  நிசப்தத்தை மீறி இளையராஜாவின் பாடல் மனத்துக்குள் மெதுவாக இசைத்துக் கொண்டிருந்தது.. "கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே, கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே.." " என் கல்யாணத்துக்கு வந்திரு"..  அவள் குரல் நிசப்தத்தை உடைத்தது..  "ஆங்.. சரி"..  அவள் கண்ணை நேராக பார்

இரட்டை வால் குருவி

Image
நம்பிக்கை எனும் நூலைக் கொண்டுதான், வாழ்க்கை எனும் பட்டம் பறக்கிறது. அந்த நூல் பலம் குன்றி இருந்தாலும் சரி, அறுந்து போனாலும் சரி, பட்டத்தின் முடிவு தரை மீதுதான்.  அதே நம்பிக்கையில தான் சேகர நான் காதலிச்சேன். ஃபேஸ் புக் நட்பெல்லாம் சரி வராதுன்னு யார் யாரோ சொல்லியும்,  நான் கேக்கல, ஆனா எவ்ளோ ஏமாளியா இருந்துருக்கோம்னு நெனைக்கறப்போ செம்ம காண்டாகுது. காதல் கண்ண மறைக்கும்னு சொல்றாங்கல, அது  அத்துனையும் நெஜம். கண்ண மறைக்கும், காத அடைக்கும், எல்லாமே செய்யும், ஆனா அறிவு மட்டும் இருக்காது.  ஃபோலோ பண்ணி ரெண்டு நாள்லே, ஃபோன் நம்பர் கேட்டான். ஆளும் பாக்க நல்லாதான் இருப்பான். அதனால யோசிக்காம கொடுத்துட்டேன். அப்புறம் அக்கறையா பேச ஆரம்பிச்சான். யாரும் இல்லாம, அன்புக்கு ஏங்குற மாதிரி என் கிட்ட பேசுனான். நானும், அய்யோ பாவம்னு ஆறுதலா இருந்தேன். ஆறுதலோட நிப்பாட்டிருக்கணும். அத விட்டுட்டு காதலிக்க ஆரம்பிச்சேன். யாரு எவரு, என்ன பண்றான், ம் ம் ம் எத பத்தியும் யோசிக்கல, கேக்கல. கல்யாணம் வரைக்கும் பேசி மொத்த நம்பிக்கையும் சம்பாதிச்சான். சரி இவனதான் கல்யாணம் பண்ண போறும்னு பாத்தா.. ஒரு குண்டா தூக்கி போட்டான் பாரு

ஆறின ரணங்கள்

Image
முதல் பட்டம் வானில் பறந்தால் அதுவும் ஒரு வெற்றி. முதல் முறை இமயம் தொட்டால் அதுவும் ஒரு வெற்றி.  மத்தவங்களுக்கு பெருசா படுற வெற்றி நமக்கு சிறுசா படலாம்..  நமக்கு பெருசா படுற வெற்றி மத்தவங்களுக்கு சிறுசா படலாம். ஒருவரோட வெற்றியின் கனத்த  நம்மளோட மேலோட்ட பார்வையில முடிவு பண்ணிட கூடாது. அந்த வெற்றிக்கு பின்னாடி இருக்குற கதையும், அத அடைய அவுங்க சந்தித்த சாவல்களுமே அதன் கனத்த உறுதி செய்யும்.  "அப்படி என்ன சாதிச்சுட்டான்னு இப்படி ஆடுறான்"ன்னு காதுப் பட பேசறவங்களும், காதுப் படாம பேசறவங்களும் இருக்கதான் செய்றாங்க. அதுக்கெல்லாம் வருத்தப்படுவதும், மனமுடைஞ்சு போறதும், என் ஸ்டாய்ல் இல்ல. ஏன்னா பேசறவங்க யாரும் எனக்குத் தோள் கொடுத்ததும் இல்ல, அவுங்க பேசறது எதுவும் கால் காசுக்கு ப்ரியோஜனமும் இல்ல. அப்படி மனமுடைஞ்சு போற ஆளா இருந்தா நான் எப்பயோ போயிருக்கணும். ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கேக்காத பேச்சுகளா? பார்க்காத அவமரியாதைகளா?.. ஆனா அதுக்கெல்லாம் நன்றி சொல்லணும். ஏன்னா அதுதான என்ன இன்னும் ஸ்ட்ரோங்கா ஆக்கிருக்கு.  மொத மொத ரேடியோல, செய்தி வாசிக்க வாய்ப்பு கெடச்சப்போ, ரொம்ப சந்தோஷப் பட்டேன். ஆ

தமிழரின் மதம்

Image
தமிழர்களின் ஆதி கடவுள் நம்பிக்கை என்ன?  சூரியன், நீர், நிலம், ஆகாயம், மரம் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிப்பாடும், குலம் காக்க உயிர் நீத்த வீரர்களையும், முன்னோர்களையும், வணங்கும் குலத்தெய்வ வழிப்பாடுமாகவே இருந்திருக்கின்றன. சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து மறைபவர்கள் தெய்வமாக வணங்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் வைதீகம் என்பது பிறகு பல்லவர் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  தமிழரின் ஆதி நம்பிக்கையில் இன்று வைதீக தாக்கங்கள் இருந்தாலும் மாறாத ஒருசில வழிப்பாட்டுமுறைகள் பின்பற்ற படுகின்றன. தெய்வங்களாக வழிப்படப்பட்ட சிலர் சிறுத்தெய்வங்களாகவும், காவல் தெய்வங்களாகவும் மாற்றப்பட்டனர். பெரும்பான்மையினர் வணங்கிய ஒரு சில தெய்வங்களை வைதீக கடவுள்களாக மாற்றிக் கொண்டனர். அப்படி சங்க இலக்கியங்களில் காணப்படும் முக்கியத் தெய்வங்கள் வேலோன், மாயோன், கொற்றவை, வேந்தன், வருணன்.  சங்க இலக்கிய சான்று: மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்

மலேசியத் தமிழ்

Image
வெறும் தொடர்பு கருவியாக இருந்து, உணர்வுகளோடு கலந்து, ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பதுதான் மொழி. மனிதன் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எழுப்பிய ஒலிகள் சொற்களாக மருவி, அந்த சொற்கள் பல பரிமாணங்களைக் கண்டு, ஒரு மொழிக்குள் அடைக்களம் காண்கின்றன. என்னத்தான் மனிதன் மொழிகளை வகைப்படுத்தினாலும், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மொழிகள் மாற்றம் காண்கின்றன.சொல் உச்சரிப்பு மாறுபடுகின்றது. ஒரு சில சொற்கள் காலத்தால் மறைந்திருக்கின்றன. ஒரு சில சொற்கள் இடத்திற்கும், காலத்திற்கும் உச்சரிக்கும் நாவிற்கும் ஏற்றாற்போல் மாற்றம் கண்டிருக்கின்றன. வேற்று மொழி படையெடுப்பால், ஒரு சில சொற்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் காலத்தோடு அழிந்தும் போயிருக்கின்றன. இப்படி பல தாக்கங்களைக் கடந்து இன்னும் உயிர்த்திருக்கும் செம்மொழிகள் சிலவே. அதில் ஒன்று தமிழ் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.  ஆனால், ஆதியில் பேசப்பட்ட எழுதப்பட்ட தமிழும், இப்போது பேசுகின்ற எழுதப்படுகின்ற தமிழும் ஒன்றா என்று கேட்டால். நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகின்றன. அதற்கு நம் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. இது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

Image
"என்னெங்க சீக்கிரம் எழுஞ்சிருங்க.. மணியாச்சு.. எவ்ளோ நேரம் அந்த அலார்ம் அடிச்சுக்கிட்டே இருக்கு.."..அய்யெய்யெய்யே, இந்த அலார்ம்மே விட இவ காத்தரதுதான் பெருசா இருக்கு.. என் பொண்டாட்டிதாங்க. நேத்து நைட்டு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே பாராத்திரி ஆச்சு. சரியாவே தூங்கல. சரி இன்னிக்கு லீவுதானே, தூங்கலாம்னு பாத்தா.. எங்கயாவது நிம்மதியா தூங்க விடுறாளா..ம்ம்ம் எல்லாம் என் தலையெழுத்து. நான் போய்யி குளிச்சுட்டு வரேன். "என்னங்க இது, குளிச்சிட்டு வீட்டு சட்டையோடு இருக்கிறீங்க? வேலைக்குப் போல".. "ம்ம்ம்.. இன்னிக்கு லீவு. நல்லா தூங்கலாம்னு பாத்தா, நல்ல செஞ்சுட்டே!".. நான் சொன்னது அவளுக்கு சுருக்குன்னு பட்டுச்சான்னு தெரில. முகம் கொஞ்சம் லைட்டா மாறுனுச்சு. " சரி சரி, பசியாறையே எடுத்து வை, என்ன ஸ்பெஷல்?" ன்னு கேட்டோன்னே அவள் முகத்துல புன்னகை திரும்பிச்சு."பொடி இட்லிங்க, உங்க ஃபேவரட்!"ன்னு என் ப்ளேட்ல 4 இட்லிய வச்சு, சட்னி, சாம்பாரையும் ஊத்துன்னா. ப்பா என்ன வாசனை. ஆனா இவ அவ்ளோ டேஸ்ட்டா சமைக்கா மாட்டாளே. சரி சப்டுத்தான் பாப்போம். "வாட்ட், சிரியஸ்லீ???

கைப்படாத ரோசா

Image
"சைந்தவி, கல்யாணம் பண்ணி இத்தன வருஷம் ஆச்சு.. எதுக்கும் டாக்டர போயி பாரு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காரு, நம்பர் தரட்டுமா?".. "இல்ல கனகா அதெல்லாம் வேணாம், கொஞ்ச நாள் ஆனா சரி ஆயிரும். சரி அப்புறம் பேசறேன். பாய்" சட்டென்னு ஃபோன்னெ வசிட்டேன். இல்லன்னா வளவளன்னு பேசுவா. வழக்கமான கேள்வி, வழக்கமான அதே பதில். எனக்கு பழகிப் போச்சு. எல்லோரும் அக்கறையில்தான் சொல்றாங்க. ஆனா, சொல்ல முடியாத சோகத்துல இருக்கறவளுக்கு ஒவ்வொரு தடவையும் அந்த கேள்வி தேள் கொட்டற மாதிரிதான் இருக்குது.  கல்யாணம், ஆயிரங்காலத்துப் பயிரு, கடவுளால் நிச்சயிக்கப்பட்டதுன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கைய கடவுள் நிச்சயிச்சான்னு தெரில. நான்தான் எதாவது பாவம் பண்ணிட்டேனா. அப்போ எனக்கு நடக்குறது பாவம் இல்லையா. அது அடுத்த ஜென்மத்துல அவன் அனுபவிப்பானா?.. என்ன கணக்கு இது? எனக்கு சத்தியமா புரில.  டாக்டரப்பாரு, இது சாப்டு பாரு, அத சாப்டு பாருன்னு சொல்றவங்க எல்லோரும், கல்யாணத்துக்கு அப்புறம் பிள்ளைய பெத்து சந்தோஷமா இருகறவங்கத்தான். என்ன மாதிரி இருக்கறவங்களுக்குத்தானே அந்த வலியும் வ