Posts

Showing posts from March, 2019

#solotrip

Image
என் சோலோ ட்ரீப்   எப்படி  தொடங்கியது?  தனிமை என்பது கசப்பானது என்றாலும். ஒரு சில சமயங்களில் நான் என்பதை ரசிப்பதற்கும், அனுபவிப்பதற்கும் அதைவிட சிறந்த தருணம் வேறேதும் கிடையாது. வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்றால், உன்னை நீ உணர வேண்டும். உலகை நீ அறிந்திருக்க வேண்டும். இதை இரண்டையும் பெற வேண்டும் என்றால், தனிப்பயணங்களை நீ அனுபவிக்கக் கற்றிருக்க வேண்டும். அதாங்க சோலோ ட்ரீப்னு சொல்வோம்ல அதுதான். சோலோ ட்ரீப் என்கிறது எனக்கும் புதுசுதான். ஆனா பழக்கமாக்கிக்கணும்னு முடிவு பண்ணேன். அதுக்காகவே மலாக்காவுக்குப் போயி மூனு நாள் தனியா தங்கினேன்.  "தனியா போனியா, தனியா போனியா"ன்னு எல்லோரும் கேட்கறப்போதான் தெரிஞ்சது ஒரு ஆளு தனியா பயணம் பன்றது நம்மவர்கள் மத்தியில் அதிசயமான ஒன்னுன்னு. ஃப்ரேண்ட்ஸோடு போறது ஜோலியாதான் இருக்கும். ஆனா தனியா போறது இன்னும் ஜோலியா இருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியுல எனக்கு அப்படிதாங்க. தனியா ஊர் சுத்தும் போது, உங்களுக்கு நீங்க கொடுக்குற நேரம் அதிகமா இருக்கும். அப்படி கொடுக்கும் போதுதான் நீங்க யாரு, உங்களுக்கு எது பிடிக்கும்ங்கிறதையும் நீங்க உணர முடி