Posts

Showing posts from February, 2020

அரசியல் ஆடுகளம்

Image
தலைப்பைப் பார்த்தவுடன், அரசியல் நுணுக்கங்களுடன் ஏதோ எழுதுப்போகிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம். மன்னிச்சிடுங்க. நான் அரசியல் தெரியாத அப்பிராணி. அப்போ எதுக்கு இந்த டைட்டல்ன்னுதானே யோசிக்கிறீங்க? அப்போதானே படிப்பீங்க. கொஞ்சம் காலமாவே, நம் நாட்டு அரசியல் எல்லோருடைய வாய்க்கும் அவல் பொரியாகியிருச்சு. யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் பேசலாங்கிற நிலைக்கு அரசியல் கீழிறக்கப்பட்டு விட்டது. அரசியல் அறிந்தவன், என்ன நடக்கப்போதுன்னு யூகிப்பில் வாழ்ந்து விடுவான். என்ன நடக்குதுன்னு தெரியாதவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிப்பான். இல்லை அரசியல் அறிந்த மாதிரி நடிப்பான். இப்படி அரசியல் தெரியாத ஒருவனின் பார்வையில், நாட்டின் நடப்பு எப்படி இருக்கிறது என்பதை பகிரவே இந்த பதிவு! அரசியல்! ஒரு பிரதமர், அவரைச் சுற்றி அமைச்சர்கள், ஏதோ நாட்டுக்கு நல்லது செய்வாங்க என்ற நம்பிக்கை. இதுதான் சாமன்ய மக்களின் நம்பிக்கை. நம்பிக்கை வெறும் நம்பிக்கையாதான் இத்தனை ஆண்டுகாலமும் இருந்திருக்கிறது. இப்போ ஊசலாடிக்கிட்டு இருக்கு. மாச மாசம் வீட்டுச் செலவு அதிகரிக்குது. ஆனா வருமானம் ஏறமாட்டுது. இதுக்கு ஒரு வழிய கா