Posts

Showing posts from November, 2020

தீவாளி இருக்க இல்லையா?

Image
முப்பது ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி என்ற பண்டிகையை நான் கொண்டாடி வருகிறேன்..முதல் 10 ஆண்டுகள் தீவாளி என்றுதான் செவி வழி கேட்டு வந்தேன். பிறகு எழுத்து வடிவத்தில் மட்டுமே இருந்த தீபாவளி என்று சொல் புலக்கத்திற்கு வந்தது. நானும் பின்பற்றினேன். சிறு வயதில் நான் பார்த்த தீவாளியில் பீரு, ஓரஞ் ஜூஸூ, ஆட்டுக்கறி, பட்டாசு, புது டிரேஸு, புது சாயம், பலகாரம், தீவாளி கார்டு, ஜோடிக்கிற பூத்தாளு இதெல்லாம் கலந்த ஒரு வாசனை இருக்கும். போக போக அந்த வாசம் கொறஞ்சு வெறும் மாஸ்க் செனிடாய்சர் வாசம்தாம் இப்போ இருக்கு. இப்படி ஒரு முப்பது வருஷத்திலேயே தீவாளில எவ்ளோ மாற்றத்தை பார்த்துட்டோம். இத்தனைக்கு மத்தியிலே, முடிந்த வரை தீவாளியை சந்தோஷமா கொண்டாடாலாம்னு பார்த்தா, தீவாளி அதுவுமா மண்டைக்கு ஏத்துற மாதிரி ஒரு மெசெஜ். அதை தொடர்ந்து இன்னொரு மெசெஜ். எனக்குப் புரிலங்க. அது ஏன் இந்துவா இருக்குற தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைக்களுக்கு மட்டும் அவ்ளோ எதிர்ப்பு. தீவாளி தமிழர் பண்டிகையே இல்லை. அப்படி கொண்டாடுற தமிழர்கள், தமிழர்களே கெடையாது. அவுங்களுக்கு யோசிக்கிற ஆற்றலே கெடையதுங்குற மாதிரியான அர்த்தத்துல மெசெஜ். அப்போ, கிறிஸ்தும