Posts

Showing posts from February, 2021

மலேசியத் தமிழ்

Image
வெறும் தொடர்பு கருவியாக இருந்து, உணர்வுகளோடு கலந்து, ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பதுதான் மொழி. மனிதன் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எழுப்பிய ஒலிகள் சொற்களாக மருவி, அந்த சொற்கள் பல பரிமாணங்களைக் கண்டு, ஒரு மொழிக்குள் அடைக்களம் காண்கின்றன. என்னத்தான் மனிதன் மொழிகளை வகைப்படுத்தினாலும், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மொழிகள் மாற்றம் காண்கின்றன.சொல் உச்சரிப்பு மாறுபடுகின்றது. ஒரு சில சொற்கள் காலத்தால் மறைந்திருக்கின்றன. ஒரு சில சொற்கள் இடத்திற்கும், காலத்திற்கும் உச்சரிக்கும் நாவிற்கும் ஏற்றாற்போல் மாற்றம் கண்டிருக்கின்றன. வேற்று மொழி படையெடுப்பால், ஒரு சில சொற்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் காலத்தோடு அழிந்தும் போயிருக்கின்றன. இப்படி பல தாக்கங்களைக் கடந்து இன்னும் உயிர்த்திருக்கும் செம்மொழிகள் சிலவே. அதில் ஒன்று தமிழ் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.  ஆனால், ஆதியில் பேசப்பட்ட எழுதப்பட்ட தமிழும், இப்போது பேசுகின்ற எழுதப்படுகின்ற தமிழும் ஒன்றா என்று கேட்டால். நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகின்றன. அதற்கு நம் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. இது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

Image
"என்னெங்க சீக்கிரம் எழுஞ்சிருங்க.. மணியாச்சு.. எவ்ளோ நேரம் அந்த அலார்ம் அடிச்சுக்கிட்டே இருக்கு.."..அய்யெய்யெய்யே, இந்த அலார்ம்மே விட இவ காத்தரதுதான் பெருசா இருக்கு.. என் பொண்டாட்டிதாங்க. நேத்து நைட்டு வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே பாராத்திரி ஆச்சு. சரியாவே தூங்கல. சரி இன்னிக்கு லீவுதானே, தூங்கலாம்னு பாத்தா.. எங்கயாவது நிம்மதியா தூங்க விடுறாளா..ம்ம்ம் எல்லாம் என் தலையெழுத்து. நான் போய்யி குளிச்சுட்டு வரேன். "என்னங்க இது, குளிச்சிட்டு வீட்டு சட்டையோடு இருக்கிறீங்க? வேலைக்குப் போல".. "ம்ம்ம்.. இன்னிக்கு லீவு. நல்லா தூங்கலாம்னு பாத்தா, நல்ல செஞ்சுட்டே!".. நான் சொன்னது அவளுக்கு சுருக்குன்னு பட்டுச்சான்னு தெரில. முகம் கொஞ்சம் லைட்டா மாறுனுச்சு. " சரி சரி, பசியாறையே எடுத்து வை, என்ன ஸ்பெஷல்?" ன்னு கேட்டோன்னே அவள் முகத்துல புன்னகை திரும்பிச்சு."பொடி இட்லிங்க, உங்க ஃபேவரட்!"ன்னு என் ப்ளேட்ல 4 இட்லிய வச்சு, சட்னி, சாம்பாரையும் ஊத்துன்னா. ப்பா என்ன வாசனை. ஆனா இவ அவ்ளோ டேஸ்ட்டா சமைக்கா மாட்டாளே. சரி சப்டுத்தான் பாப்போம். "வாட்ட், சிரியஸ்லீ???

கைப்படாத ரோசா

Image
"சைந்தவி, கல்யாணம் பண்ணி இத்தன வருஷம் ஆச்சு.. எதுக்கும் டாக்டர போயி பாரு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காரு, நம்பர் தரட்டுமா?".. "இல்ல கனகா அதெல்லாம் வேணாம், கொஞ்ச நாள் ஆனா சரி ஆயிரும். சரி அப்புறம் பேசறேன். பாய்" சட்டென்னு ஃபோன்னெ வசிட்டேன். இல்லன்னா வளவளன்னு பேசுவா. வழக்கமான கேள்வி, வழக்கமான அதே பதில். எனக்கு பழகிப் போச்சு. எல்லோரும் அக்கறையில்தான் சொல்றாங்க. ஆனா, சொல்ல முடியாத சோகத்துல இருக்கறவளுக்கு ஒவ்வொரு தடவையும் அந்த கேள்வி தேள் கொட்டற மாதிரிதான் இருக்குது.  கல்யாணம், ஆயிரங்காலத்துப் பயிரு, கடவுளால் நிச்சயிக்கப்பட்டதுன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கைய கடவுள் நிச்சயிச்சான்னு தெரில. நான்தான் எதாவது பாவம் பண்ணிட்டேனா. அப்போ எனக்கு நடக்குறது பாவம் இல்லையா. அது அடுத்த ஜென்மத்துல அவன் அனுபவிப்பானா?.. என்ன கணக்கு இது? எனக்கு சத்தியமா புரில.  டாக்டரப்பாரு, இது சாப்டு பாரு, அத சாப்டு பாருன்னு சொல்றவங்க எல்லோரும், கல்யாணத்துக்கு அப்புறம் பிள்ளைய பெத்து சந்தோஷமா இருகறவங்கத்தான். என்ன மாதிரி இருக்கறவங்களுக்குத்தானே அந்த வலியும் வ