Posts

Showing posts from May, 2020

I'm Single!

Image
“கல்யாணம் இப்பெல்லாம் அடிக்கடி கேட்கிற வார்த்தையாயிருச்சு. இந்த வார்த்தைய வெறுக்கிறேனா இல்ல விரும்ப ஆய்த்தமாகிட்டேனான்னு எனக்கே இப்போ சந்தேகமாயிருச்சு. இதுல்ல இவனுக்குக் கல்யாணம், அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கைய வேற நீட்டிறானுங்க… கடுப்பேத்திக்கிட்டு!” என் எண்ணம் ஒரு புறம் போய்க் கொண்டிருந்தது. பயணித்த கார் ஒரு புறம் போய்க் கொண்டிருந்தது. எங்கென்னு கேட்கிறீங்களா? வேலைக்குதான். ம்ம்ம் இந்த டிரஃபிக் ஜேம் வேற. உங்களுக்குத் தெரியாதா, காலையிலே அதுவும் பூச்சோங் ரோட்ல. சொல்லவா வேணும். இதுல ஆயிரத்து எட்டு டிரஃபிக் லைட்ஸ். ஒவ்வொரு முறையும் வாகனத்த நிறுத்தும் போதும், இந்த கல்யாண விஷயம் நெனப்புக்கு வருது. நான் என்ன மாட்டேன்னா சொல்றேன். அமைஞ்சா பண்ணமாட்டோமா. இதுல ஆபிஸ்ல உள்ளவங்க வேற எப்படா கல்யாணம் எப்படா கல்யாணம்னுக்கிட்டு. ஆமா, இந்த ஆபிஸ்ல, அப்படியே இளஞ்சிட்டுகளா இருக்குறாங்க. எல்லாம் வயசான கட்டைக! என்ன பண்றது. எல்லாம் என் தலைவிதினு இருக்க வேண்டியதுதான்.  இதோ என் வசந்த மாளிகைக்கு வந்தாச்சு.. என்ன தேடுறீங்க. இதோ இதுதான். என் ஆபிஸதான் சொன்னேன். இன்னிக்கு வேலைக்குக் கொஞ்சம் லேட்டுங்