Posts

Showing posts from March, 2020

இன்றை நேசிப்போம்

Image
"இன்று" இது எவ்வளவுப் பெரிய வரம் என்பதை உலகம் இன்று உணர்ந்திருக்கும். உலகமே அரண்டுப் போய்க் கிடக்கிறது. அப்படி ஒரு பாதிப்பைக் கொரொனா ஏற்படுத்தியுள்ளது. கொரொனா, பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. அதிரும். எத்தனையோ உயிர்களைக் கொன்னு குவித்த பாவி அது. இன்று நாம் ஒவ்வொரு நாளும், எத்தனை பேர் மரணித்திருக்கிறார்கள் என கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதைவிட கொடுமை வேறு எதுவாக இருக்க முடியும். யாரும் நினைத்தப் பார்க்காத நிலையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம்.  இது மனிதனே மனிதனுக்கு ஏற்படுத்திவிட்ட பேரழிவே தவிர வேறு எதுவும் கிடையாது.  ஆம். இறைவன் தந்த அழகான பூமியை மாசுப் படுத்தினோம். இறைவன் படைத்த உயிர்களைத் தன்னூண் பெருக்கத்துத் தின்று மகிழ்ந்தோம். அகழ்வாரைத் தாங்கும் நிலம் திருவள்ளுவர் காலத்திலேயே காலவதியாகிவிட்டது. அப்படியும் இன்று இருந்தாலும், நாம் என்ன வள்ளுவன் வாக்கை மதித்து வாழ்கிறோமா? ஐய்யய்யோ இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் இந்தியர்கள் என ஒதுங்கிக் கொள்ள போகிறோமா? பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்க யாரும் முன் வர மாட்டார்கள். ஆனால், பிறரைக் கைக்காட்டித் தப்ப

சைலைபுத்ரி (பாகம் 3)

Image
அந்த அலறல் சத்தம் கேட்டு பயந்து போய் கண்களை இருக மூடிக் கொண்டேன். "என்னங்க என்னங்க" என்று யாரோ என்னை உளுக்கிய உணர்வு. கண்ணைத் திறந்து பார்த்தால்தான் தெரிகிறது "நான் கண்டது ஒரு கனவு" என்று. இப்படிதான் முடிப்பேன் என நினைத்தீர்கள். அதான் இல்லை. கதையை அப்படியெல்லாம் முடித்து விட மாட்டேன். ஆனால் நான் கண்ட காட்சி உண்மையில் கனவா என்ற சந்தேகம் எழுந்தது. இருண்டிருந்த இடம், திருவிழா கோலம் பூண்டது. இது என்ன மாயஜாலமாக உள்ளது. என்னைச் சுற்றி ஆயிரங்கணக்கானோர் சூழ்ந்திருந்தனர். பாகுபலி திரைப்படத்தில் பார்ப்பது போல் அனைவரும் ராஜ உடையுடன் தக தகவென் இருந்தனர். என்னுடன் இருந்த பெண்ணோ, தேவதைப் போல் காட்சி அளித்தாள். "என்ன நடக்குது இங்கே" என்று குழப்பத்தில் நான் இருந்தேன். அவர்களோ இன்முகத்தோடு சும்ம மினுமினுத்துக் கொண்டிருந்தனர். குமரிகள் ஒருபுறம் என்னை பார்த்து பார்த்து அவர்களுக்குள் என்னமோ முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். கிழவிகளா என்னைப் பார்த்து நாணத்தில், தரையில் கோலம் போட்டனர். எனக்கு பக்கம் பயமாகத்தான் இருந்தது. அந்த கூட்டத்தில் இருந்து பெரியவர் ஒருவர் என்ன நோக்கி நட