Posts

Showing posts from December, 2018

இலக்கணம் மாறுமா?

Image
“ராஜி எழுந்துருங்க..மணி ஆறாகுது. அலாரம் அடிச்சுக் கிட்டே இருக்கு, அத கொஞ்சம் அடைங்களேன்” சமையல் கட்டிலிருந்து சத்தம் போட்டான் கணவன் வினோத்.. முகம் வரை மூடிக் கொண்டிருந்த போர்வையை எரிச்சலோடு விலக்கிவிட்டு, சோம்பல் முறித்தாள் ராஜி. “அய்யய்யய்யே, நொய் நொய்ன்னுக்கிட்டேதான் இருப்பியா நீ? சமையல் வேலைய பாரு!” படுக்கையறையிலிருந்தே கூச்சலிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ராஜி. எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் வினோத் தன் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தான். அதற்குள் இன்னோர் அலாரம் அடித்தது. அது அவனுடைய கைப்பேசி. “பவானி, பரி! எழுந்துருங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு!” என கூவிக் கொண்டே பிள்ளைகளின் படுக்கையறைக்குள் சென்றான். படுக்கையின் மேல் நெளிந்துக் கொண்டிருந்த தனது இரு பிள்ளைகளையும் தட்டி எழுப்பி “ஹே பசங்களா சீக்கிரம் எழுந்திருங்க! மணியாகுதல்ல.” என பிள்ளைகளை குளியலறைக்குள் அனுப்பும் போதே குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டு சமயலறைக்குள் குடுகுடுவென ஓடினான் வினோத். “டிங்டோங்” இப்போது, கார்லிங் பெல் சத்தம்.. “மணி ஏழாச்சா, பேப்பர்காரி வந்திருப்பா” என மனசுக்குள்ளே பேசிக் கொண்டே வாசல் கதவைத் திறந்து

நான் கனவு காணல்ல..

Image
எல்லோரும் பொதுவாவே சின்ன வயசுல்ல டாக்டராகணும், டீச்சராகணும்னும் சொல்லவாங்க. ஆனால் அதெல்லாம் தானா வந்த கனவா? இல்லைவே இல்லைங்க. யாரோ வேறொருவர் நமக்குள் விதைச்சது. நாம அதெல்லாம் நம்ளோட சொந்த கனவாவே நினைச்சுக்குவோம்.இப்படிதான் பள்ளியில்ல ஒருமுறை என் டீச்சர் என்னைக் கேட்டாங்க “குமரா, உன்னோட எதிர்கால ஆசை என்ன?” டீச்சர் எனக்கு, டாக்டர் ஆகணும், டீச்சர் ஆகணும், போலீஸ் ஆகணும்னு சொன்னேன். “இவ்வளவும் உன் ஆசையா?” டீச்சருக்கு ஒரே நக்கல். இல்ல டீச்சர், நான் டாக்டர் ஆகணுங்கிறது என் பாட்டியோட ஆசை, நான் டீச்சர் ஆகணுங்கிறது என் அம்மாவோட ஆசை, நான் போலீஸ் ஆகணுங்கிறது என அப்பாவோட ஆசைன்னு சொன்னேன். உடனே டீச்சர் கெக்கபுக்கன்னு சிரிச்சாங்க. அப்போ அவங்க ஏன் அப்படி சிரிச்சாங்கன்னு எனக்குத் தெரில்லைங்க. ஆனால், பின்னாளில் அவங்க சிரிச்ச சிரிப்புச் சரியா போச்சு. மருத்துவர் ஆகிடுவோம்னு நம்பிக்கையோடு சைன்ஸ் ட்ரீம் போனேன். ஆனா பாடம் எதும் மண்டையிலே ஏறல்ல. அப்படி இப்படின்னு பல்கலைக்கழகத்தை முடிச்சுட்டு வேலைக்குத் தயாரானேன். வீட்டில் எல்லாம், போலீஸ் வேலைக்கு அப்ளைப் பண்ணு, டீச்சர் வேலைக்கு அப்ளைப் பண்ணுன்னு சொன்னா

சீபில்டு மாரியம்மன் (Seafield Mariamman)

Image
மலேசியா ஷா ஆலாமின் அமைந்திருக்கும் பழைமை வாய்ந்த ஆலயம்தான் சீபில்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயம் 1891ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதே காலக்கட்டத்தில் அப்பகுதியில் கட்டப்பட்ட பிற ஆலயங்கள் இடமாற்றம் செய்யப்பட்டும், சீபில்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இன்னும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த இந்த அம்மனின் அதிசயங்களையும், இவ்வாலயத்தின் வரலாற்றை உலகிற்கு அறியச் செய்யவே இக்காணொளி.

சைலைபுத்ரி (தொடர்:பாகம் 1)

Image
மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கேஏல் டூ சொந்த ஊர் பயணம் உண்டு. விடியற்காலையில் கிளம்பினால் நெரிசல் இருக்காது என்பது என் நம்பிக்கை. எப்போதும் அந்த சமயத்தில் கிளம்புவதுதான் என் வழக்கம். அன்று கிரிஸ்மஸ்க்கு முதல் நாள், அதாவது டிசம்பர் 24. அதிகாலை 3 மணிக்கே கிளம்பிட்டேன். எதிர்ப்பார்த்த மாதிரியே சாலையில் காடிகளே இல்லை. ஆனால் என்னவோ அன்னிக்கு என் கண்கள் சொருகிக் கொண்டே இருந்தன. நல்லாதான் தூங்கி எழுந்தேன். இருந்தாலும் தூக்கமாகவே இருந்தது. எப்போதும் இப்படி தூக்கம் வந்தால் காடியை ஒரு ஓரமாக போட்டுத் தூங்குவேன். இல்லைன்னா நான் ஒரு புறம் அலசுவேன், காடி ஒரு புறமாக அலசும். சரி வீடு சேர இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம்தானே, போயிறலாம்ன்னு தோனுச்சு. ஆனால் என் கண்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. சரி எங்காவது ஓரமா காடியைப் போட்டுட்டுத் தூங்கிடுவோம்னு முடிவுக்கு வந்தேன். அப்போது குவா தெம்பூரோங் கிட்ட வந்தாச்சு. ஏற்கெனவே இதற்கு முன் அங்க காடியைப் போட்டுத் தூங்கியது உண்டு. சரி இங்கேயே ஒரு தூக்கத்தைப் போட்டிடலாம்னு காடியைச் சாலை ஓரமாக நிறுத்திட்டு சீட்டியைப் பின்னாடி நகர்த்தினேன். வானொலி சத்தத்தைக் குறைத்துவிட்

அணங்கு

Image
கதிரவன் கடல் மேல் எழுகின்ற கோலம்; காற்றின் ஈரம் காயாத நேரம். அருந்ததியின் கண்ணீரும் காயாமல்தான் இருந்தது. நேற்றையச் சம்பவம் அவள் மனதில் இன்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. “அருந்ததி, வேலைக்கு மணியாகலையாம்மா? எழுந்திரு” என்றாள் அவளின் அம்மா கோமளவள்ளி. இளம் வயதிலேயே கணவனை இழந்த கோமளவள்ளி ஒற்றை ஆளாக, தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினாள். சிறு வயதிலிருந்தே அம்மாவின் கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்ததால், பெற்றவளுக்கு மேலும் எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அருந்ததிக்கு இருந்தது. அதனாலேயே தன் வாழ்வில் நடக்கின்ற பிரச்னைகளைப் பற்றி கோமளவள்ளியிடம் அவள் கூறுவதே இல்லை. “அருந்ததி.. எழுந்திரும்மா”மீண்டும் தட்டி எழுப்பினாள் கோமளவள்ளி. விழியோரம் பசையாய் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் அம்மாவுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டே எழுந்தவள், தாயிடம் முகத்தைத் காட்டாமலேயே குளியலறைக்குள் நுழைந்தாள். குளியலறையில் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணாடியில் தன் சிவந்த கண்களைக் கண்டு அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது. வாயை மூடிக் கொண்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். “அருந்ததி! என்னம்மா பண்ற