Posts

Showing posts from January, 2021

தைப்பூச வாழ்த்துகள்!

Image
"தைப்பூச வாழ்த்துகள்".. இதை பார்த்ததும் பொங்கி எழும் போராளிகளே பொறுமை.. இப்படி கூறுவதால் எதுவும் மூழ்கி போக போறதும் இல்ல. அது குத்தமும் இல்ல. நெறி..ம்ம்ம் அது சரியான வார்த்தையா இருக்காது.. ஒழுக்கம்.. ஒழுக்கத்தோடு தைப்பூசத்தை கொண்டாடறதுக்கே நாம இன்னும் எவ்வளவோ போராட வேண்டியது இருக்கு. அத பத்தி பேசலாமே. ஆனா இந்த வருஷம் அத பத்தி பேச அவசியம் இல்லதான். அதனால பரவால.. ஒன்னு மட்டும் புரியலைங்க, மொழியையும் கலாசாரத்தையும், இல்ல சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் எத்தன காலத்துக்குதான் ஸ்தேண்டடாய்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க போறீங்க? இருக்கற மொழியயே இங்க யாரும் சரிய பேசமாட்டுறாங்க. இதுல மொழிய இன்னும் தூய்மை படுத்தறதால என்ன கிடைக்கப்போது உங்களுக்கு. இப்போ நாம பேசற மொழி ஆதி தமிழர் பேசிய மொழியின் துளி அளவுதான். பிரித்து எடுக்க முடியாத அளவுக்கு மத்த மொழியோட கலப்பும் இருக்கு. பாலையும் தண்ணீரையும் பிரித்து எடுக்கும் அன்னமாக இருந்தால் பரவால...நாம மனுசங்க.. ஆராய்ஞ்சு தெளியுறதுக்குள்ள பல ஜென்மம் போயிரும்... இந்த எதார்த்ததத்தான் நெறைய பேரு புரிஞ்சக்க மாட்டாங்க. எப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர்களாக இருந்தாலும்

கந்தா கடம்பா கருணாகரனே

Image
கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே! குமரா குகனே  குணமிகு வேலா குறமகள் நாயகனே! ஆறுமுகமானவா ஆனைமுக சோதரா ஆறுபடை வீடவனே! ஆளும் குலம் காக்கவே, ஓடி வர வேண்டும் நீ, வேலை எடு வேலவனே!  மௌனம் ஏனோ எந்தையே.. உருகி துதித்தோம் நின்னையே! காக்க வேண்டும் எம்மையே.. காண வேண்டும் உன்னையே! கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே! குமரா குகனே  குணமிகு வேலா குறமகள் நாயகனே! உனை நாடி வந்தேன் புகழ் பாடி வந்தேன்- நீ கேளாயோ வேல்முருகா? உளம் உருகி நின்றேன் உடல் வருத்திக் கொண்டேன்-நீ பாராயோ மால்மருகா?                              வாராயோ வேல்முருகா-குறை தீராயோ மால்முருகா.. நீரின்றி ஏது புவி-இங்கு நீயின்றி ஏது கதி?  கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே! குமரா குகனே  குணமிகு வேலா குறமகள் நாயகனே! ஆறுமுகமானவா ஆனைமுக சோதரா ஆறுபடை வீடவனே! ஆளும் குலம் காக்கவே, ஓடி வர வேண்டும் நீ, வேலை எடு வேலவனே!  அருள் காட்சித் தந்தாய் அகம் குளிர வைத்தாய்-எம் அகரமுமானவனே! அன்று சொன்ன குறை- இன்று இல்லை என- நான் தெளிந்தேன் பெருமாளே!                                வந்தாயே வேல்முருகா குறைதீர்த்தாயே மால்மருகா! கண்டேனே என் பரனே- நான் ச

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

Image
சதையும் ரத்தமும் மட்டுமே மனிதனின் தேகம் அல்ல.. உணர்வுகளும் கலந்திருக்கின்றன. அவற்றின் நாட்டங்களில்தான் மனிதனின் வாழ்க்கை அலை மோதிக்கொண்டிருக்கிறது. அலைகளுக்குத் தெரியாது அவை ஏன் தரையோடு மோதிக் கொண்டிருக்கின்றன என்பது. கடலின் ஆழ்மட்ட அழுத்தத்துக்கு மட்டுமே தெரியும் அதன் ரகசியம். மனிதனின் ஆழ் மன ரகசியங்களும் அப்படித்தான்.  ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அதை கடந்து குடும்பம் சமூகம் வெளியுலகம் என தன்னுடைய உலகை இருளாக்கிக் கொண்டுதான் வாழ்கிறான். தனது உலகத்தை வெளிச்சமாக்கிக் கொள்கிறவர்கள் வெளியுலகில் இருளைக் காண்கிறார்கள். இரு உலகையும் வெளிச்சமாக்க முயல்கிறவர்கள் கடைசிவரைக்கும் வாழாமாலே மடிகிறார்கள்.  எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதற்குள் ஆயுள் காணலாகிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், எப்படி வாழ வேண்டும் என்ற அளவுக் கோளைத் தேடியே காலத்தைக் கரைக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவை சமூகம் எடுத்துக் கொள்கிறது. அப்படியென்றால் அந்த வாழ்க்கை சமூகத்து