Posts

Showing posts from June, 2020

வந்த மல, போனா டோட்!

Image
நான் சாக போறேன். எனக்குன்னு இங்க யாருமே இல்ல. நான் ஆசைப்பட்டது எதுவுமே நடந்தது இல்ல. என் வாழ்க்கை இன்னிக்கு மாறும், நாளைக்கு மாறும், நாளாநளைக்கு மாறும்னு காத்து காத்து எனக்கு வெறுத்துப் போச்சு. எல்லாமே வேஸ்ட். என்னென்னு கேட்க எந்த நாதியும் இல்ல. மூனு நாளா அழுறேன். என் கண்ணீரைத் துடைக்க ஒருவரும் இல்ல. இனி எதுக்கு நான் வாழணும். அதேதான் நானும் கேட்கிறேன் எதுக்கு நீங்க வாழணும். உங்களோட ஆசைக்காகவும், உங்களோட லட்சியத்துக்காகவும் மட்டும்தான் நீங்க வாழணும்னா, ஸோரி டு சே நீங்க ஒரு சுயநலவாதி! அட ஆமாங்க. இந்த உலகம்தான் உங்களை தனிமைப்படுத்துது. உங்கள சுத்தி இருக்கறவங்கதான் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கறாங்க. எல்லாமே சரி. ஆனா நீங்க என்ன பண்ணீங்க?.  தனிமப்படுத்துற உலகத்துக்காக, உங்களுக்காக ஏங்கிகிட்டு இருக்குற உலகத்தை புறக்கணிக்கிறீங்க. மனம் விட்டு பேச நினைக்கிறவங்கள விட்டுட்டு, மன அழுத்தம் கொடுக்கறவங்களதான் தாங்கி பிடிக்கிறீங்க. ஒன்னு மட்டும் புரிங்சுக்கோங்க, நீங்க நெனைக்கிற மாதிரி நீங்க தனிமையில இல்ல. நீங்கதான் உங்களை தனிமைப்படுத்திக்கிறீங்க. இப்படி தப்பெல்லாம் உங்க பக்கம் வெச்சுட்ட

குசினி

Image
"இவளுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாத்தாலும் அரிசி இல்ல, உப்பு இல்லன்னு வந்து நின்னுருவா. இவளுக்கு எறச்சே வீட்ல இருக்குற எல்லாமே முடிஞ்சிருது" டம்ளரை உருட்டினாள் வல்லி. இத்தனையும் காதில் விழதான் செய்தது ஜானகிக்கு. வாசலில் காத்திருந்தவளுக்கு அப்படியே திரும்பிருலாம்னுதான் தோனுச்சு . ஆனால் சூடு சொரணையெல்லாம் பார்த்தா சோத்துக்கு என்ன பண்றது என்ற நெனப்பும் அவளை வாட்டியது. கால் முன்னும் பின்னும் அல்லாடியது. ஆனா அவளை நகரவிடமால், அவளின் கயிலியைப் பற்றிக் கொண்டிருந்தது அவளின் அஞ்சு வயசு பொண்ணு . "நீ வேற.. வா" என அவளை தூக்கி மடியில் வச்சுக்கிட்டாள் ஜானகி.  இடுப்பில் சுமந்தபோதுதான் குழந்தையின் பசியை அவளால் உணர முடிந்தது. பசியால் குழந்தை அழுதால் அடித்து நிறுத்தலாம். ஆனால் வயித்துக்கு தெரியுமா. குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளின் ஈரம் படிந்த கண்களோ வல்லியின் குசினியை நோக்கி காத்திருந்தன."இந்தா!" ஜானகியிடம் ஒரு மங்கில போட்ட வச்ச அரிசியை நீட்டினாள் வல்லி. "யேக்கா, 4 கோல கேட்டேன். இது பத்தாதுக்கா" என்றாள் ஜானகி. "வேணும்னா ஒரு மூட்டையை அப்படியே வந்

I Miss MCO Days!

Image
"ஐ மிஸ் எம்.சி.ஒ டேய்ஸ்"..எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல இததான் சோசியல் மீடியா முழுக்க பார்க்கப் போறோம். மத்தவங்க போடறதுக்கு முன்னாடி நாம முந்திப்போம். ஏன்னா எனக்கு அந்த ஃபீல் ரொம்ப சீக்கிரமாவே வந்திருச்சு. என்னங்க பண்றது, வாழ்ற நிமிசத்த மறந்து, வாழ்ந்து முடிந்ததையும், வாழ முடியாததையும்தான் நாம பெருச பாக்குறோம். இது ஒரு வேள மனுஷனோட சாப கேடா இருக்கலாம். இல்ல நமக்கே நாம வச்சுக்குற ஆப்பா கூட இருக்கலாம். கடவுளுக்குதான் வெளிச்சம். நடமாட்ட கட்டுப் பாட்டு ஆணை. எம்.சி.ஒ.க்கு தமிழில் வழங்கப்பட்ட அழகான மொழிப்பெயர்ப்பு. இந்த பேரு உருவாகறதுக்கு முன்னாடி ஒரு 5 மாசம்னு நெனைக்கிறேன், ஐயா ஒரே பிஸி. ஒரு கட்டம் அடடா நாம வேற லெவெலுக்குப் போக போறோம்னு கனவெல்லாம் கண்டேன். அதே சமயத்துல ஒரு பயமும் அப்போ அப்போ வரும். வாழ்க்கை ரொம்ப ஸ்பீடா போக்குதே எங்கேயாவது கடவுள் ப்ரேக் வச்சிருவாரோன்னு. சில நேரத்துல, டைமே இல்லன்னு பொலம்பிருக்கேன். அப்போல்லாம், எனக்கே நான் சொல்லிக்கிறது. "ஸ்ரீ குமரா, இப்படில்லாம் பொலம்பாதே, பிஸியா இருக்குறதும் நல்லதுதான். கடவுள் எல்லாம் யோசிச்சுதான் செய்வாரு.

நீ ஒழுங்கா?

Image
எங்கு எது நடக்கும், எதை வைரலாக்கலாம் என்ற விசைப்பலகை போராளிகளின் பசிக்குத் தீனிப் போட்டிருக்கிறது, கேரளாவில் சினையானை படுகொலை என்ற செய்தி! கொலையா? நீங்க பாத்திங்களா?. ம்ம்ம். அது தேவையற்றது. கிடைத்த செய்தியை அப்படியே பகிர்வோம். நமக்கும் மனசு இருக்குன்னு நாலு பேருக்கு தெரிஞ்சா சரி. லைக்ஸ் அள்ளும். அதுதான் முக்கியம். தப்பில்லை. பகிருங்கள். ஆனால் மனிதம் மீதான அவநம்பிக்கையைத் தூண்டாதீர்கள். இந்த ஒரு சம்பவத்தால்தான் மனிதம் மடிந்து விட்டது என்றால் அது நமது அறியாமை.  அனுதினமும் எங்கோ ஒரு மூலையில் மனித்தத்தையே மிரள வைக்கும் வகையில் மிருகங்களுக்கு எதிரான ஏதோ ஓர் அசாம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது நம் திரைக் கண்களில் புலப்படவில்லை அவ்வளவுதான். அதற்காக இல்லையென்று ஆகாது.  வருத்தம்தான். கண்ணுக்குத் தெரியும் கொடூரங்களைப் பார்க்கும் போது மனமும் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன. சினை என்று தெரிந்தும் அந்த பிடியைச் செந்தாழையில் வெடி வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்த யானையால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் இல்லை பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம். ரத்தத்தை