Posts

Showing posts from August, 2021

தமிழரின் மதம்

Image
தமிழர்களின் ஆதி கடவுள் நம்பிக்கை என்ன?  சூரியன், நீர், நிலம், ஆகாயம், மரம் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிப்பாடும், குலம் காக்க உயிர் நீத்த வீரர்களையும், முன்னோர்களையும், வணங்கும் குலத்தெய்வ வழிப்பாடுமாகவே இருந்திருக்கின்றன. சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து மறைபவர்கள் தெய்வமாக வணங்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் வைதீகம் என்பது பிறகு பல்லவர் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  தமிழரின் ஆதி நம்பிக்கையில் இன்று வைதீக தாக்கங்கள் இருந்தாலும் மாறாத ஒருசில வழிப்பாட்டுமுறைகள் பின்பற்ற படுகின்றன. தெய்வங்களாக வழிப்படப்பட்ட சிலர் சிறுத்தெய்வங்களாகவும், காவல் தெய்வங்களாகவும் மாற்றப்பட்டனர். பெரும்பான்மையினர் வணங்கிய ஒரு சில தெய்வங்களை வைதீக கடவுள்களாக மாற்றிக் கொண்டனர். அப்படி சங்க இலக்கியங்களில் காணப்படும் முக்கியத் தெய்வங்கள் வேலோன், மாயோன், கொற்றவை, வேந்தன், வருணன்.  சங்க இலக்கிய சான்று: மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்