Posts

Showing posts from October, 2019

பாலியில் தனியே பயணம்- பாகம் 1

தனியே ஒரு நெடுதூரப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் தோன்றியது. பாலிக்குப் போக வேண்டும் என்பது என் மனதில் பல நாளாக இருந்த ஆசை. சரி பாலிக்கே போகலாம் என்று முடிவெடுத்தேன். பாலி என்றால் கடவுளர் தீவுன்னுச் சொல்லுவாங்க. உண்மையில் அது கடவுளின் தீவுதான். எங்கு பார்த்தாலும் கோயில்களும், கடவுளின் விக்ரகங்களும்தான் தென்பட்டன. பாலிக்குப் போக முடிவெடுத்த மறுகணமே, டிக்கெட் புக் பண்ணிட்டு, அங்கு என்ன என்ன இடங்கள் இருக்கின்றன, போக்குவரத்து வசதிகள் எப்படி, எங்கு தங்கினால் சௌகரியம், எப்படியெல்லாம் ஜாக்கிரடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு அலசு அலசிவிட்டேன். முதல் நாள் பாலியில் காலடி எடுத்து வைக்கும் போது அங்கு இரவாகிவிட்டது. ஏர்ப்போட்டை விட்டு வெளியேறும் போதே, டெக்சி காரர்களும், கோஜேக்கும் என்ன சுற்றி வலைத்து விட்டனர். கொஞ்ச நேரத்தில் நான் மூச்சுத் தெணறி போனேன். என்னைக் கட்டாயப்படுத்தி அவர்கள் டெக்சியில் வர சொன்னார்கள். என்ன ஆனாலும், அவர்கள் கார்களில் ஏறக்கூடாது என முடிவெடுத்து வேகமாக மேய்ன் ரோட்டுக்கு நடந்தேன். எல்லாம் ஒரு வகையான பயம்தான். மேய்ன் ரோட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு டெக்சி அங்கிள் வந்தாரு, ப
Image
அண்மையில் ஆயாம் என்பவரைச் சந்தித்தேன். ஆயாம் என்றால் கோழி என்று எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் எப்படி இவருக்கு அந்த பெயர் வந்தது என்ற கேள்வி என் மூளையைச் சுரண்டிக் கொண்டேன் இருந்தது. உடனே கேட்டு விட்டேன். உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று ஆயாமிடம் கேட்டபோது சின்ன வயதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி என்னோடு பகிர்ந்து கொண்டார்.  சின்ன வயதில் ஆயாம் ரொம்ப பயந்து சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஒரு முறை  கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவருக்கு விக்கல் வந்திருக்கிறது. அந்த விக்கல் பண்ண வேலைதான் இது. அது சாடா விக்கல் அல்ல, மண்லபத்தையே அதிர செய்திருக்கிறது. அந்த சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த பேச்சாளர் ஒலிப்பெருக்கியில் ஆயாமின் இயர்ப் பெயரை உரக்கக் கூறி கிண்டலடித்திருக்கிறார். மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ஆயாமைப் பார்த்துப் பலமாக சிரித்திருக்கிறார்கள்.  அது தமக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதான், மண்டபத்தை விட்டு வெளியேறி வகுப்பறை ஒன்றில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அதை கண்டு பிடித்த சக மாணவர் கோழியைப் போல் பயந்து ஒளிந்து கொண்டாயே என்று கிண்டல் செய்ய, 

இந்த நொடிதான்..

Image
ஒர் ஊரில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே ஏதோ மனக்குறையுடனே இருப்பார். இது சரியில்லை அது சரியில்லை என குறைக் கூறிக் கொண்டிருப்பதே பொழுதுகாக வைத்திருந்தார். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசமாட்டார். நாளாக நாளாக அவரின் குணம் இன்னும் மோசமானது. அவரின் பேச்சுப் பலரின் மனதைப் புண்படுத்தியது. எல்லோரும் அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர். அவருடம் பேசினாலே நமக்குள் இருக்கும் சந்தோஷம் போய்விடும் என்ற பயத்தில் அவரை கண்டாலே அஞ்சி ஒதுங்கினர். இப்படியே காலம் ஆக ஆக, ஒரு நாள் அவரை பற்றிய ஒரு புரளி பரவலானது. அந்த பெரியவர் எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதாக கூறப்பட்டது. இதை நம்ப இயலாமல் எல்லோரும் அவரை நேரில் காண சென்றனர். கூறியது போலவே அவர் எல்லோருடனும் சிரித்துப் பேசினார். மகிழ்ச்சியாக காணப்பட்டார். ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம், என்ன பெரியவரே என்ன செய்தி. இன்று எதோ உங்களிடம் மாற்றம் தெரிகிறதே என்று வினாவினர். அதற்கு அந்த பெரியவர் " இதுவரையில் சந்தோஷம் என்பது எதுவென்று தெரியாமல் தேடி தேடி அலைந்தேன். ஆனால் இனி சந்தோஷத்தை தேடமால், வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்று முடிவுப் பண்ணி விட்டேன். அ