#solotrip
என் சோலோ ட்ரீப் எப்படி தொடங்கியது?
தனிமை என்பது கசப்பானது என்றாலும். ஒரு சில சமயங்களில் நான் என்பதை ரசிப்பதற்கும், அனுபவிப்பதற்கும் அதைவிட சிறந்த தருணம் வேறேதும் கிடையாது. வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்றால், உன்னை நீ உணர வேண்டும். உலகை நீ அறிந்திருக்க வேண்டும். இதை இரண்டையும் பெற வேண்டும் என்றால், தனிப்பயணங்களை நீ அனுபவிக்கக் கற்றிருக்க வேண்டும். அதாங்க சோலோ ட்ரீப்னு சொல்வோம்ல அதுதான். சோலோ ட்ரீப் என்கிறது எனக்கும் புதுசுதான். ஆனா பழக்கமாக்கிக்கணும்னு முடிவு பண்ணேன். அதுக்காகவே மலாக்காவுக்குப் போயி மூனு நாள் தனியா தங்கினேன்.
"தனியா போனியா, தனியா போனியா"ன்னு எல்லோரும் கேட்கறப்போதான் தெரிஞ்சது ஒரு ஆளு தனியா பயணம் பன்றது நம்மவர்கள் மத்தியில் அதிசயமான ஒன்னுன்னு. ஃப்ரேண்ட்ஸோடு போறது ஜோலியாதான் இருக்கும். ஆனா தனியா போறது இன்னும் ஜோலியா இருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியுல எனக்கு அப்படிதாங்க. தனியா ஊர் சுத்தும் போது, உங்களுக்கு நீங்க கொடுக்குற நேரம் அதிகமா இருக்கும். அப்படி கொடுக்கும் போதுதான் நீங்க யாரு, உங்களுக்கு எது பிடிக்கும்ங்கிறதையும் நீங்க உணர முடியும். ஏன்னா நம்பாதான் வாழ்க்கை முழுக்க மத்தவங்களுக்காகவே வாழ்றோமே. அதுல நமக்குப் புடிச்சது எதுன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது.
சரிங்க, மலாக்காவுக்குப் போனப்போ எனக்கு நல்ல அனுபவம் கிடைச்சது. சில பேரு நினைக்கலாம். மலாக்கால சுத்துறது அவ்ளோ பெரிய கம்பசாஸ்த்ராமான்னு. ஆனா ஒரு புது ஊர்ல எந்த கவலையும் இல்லாம, நமக்குப் புடிச்ச மாதிரி, நாம்ப விரும்புற இடத்தைத் தேடி ஊர் சுத்துறது தனி சுகம்தான். மலாக்கா மலேசியால இருந்தாலும், அது எனக்குப் புது இடம்தான்.
மலாக்காவுக்குப் போறப்போ எந்த ப்ளேனும் இல்லாமதான் போனேன். ப்ளேன் பண்ணிப் போனா அது சோலோ ட்ரீப்பே கிடையாதே. ஆனா போனதும் எது எது எப்படி நடக்கணுமோ அது அது அப்படி நடந்துச்சுங்க. ஒரு சைக்கிள் ரெண்ட் பண்ணிட்டு மலாக்கா டவுனையே சுத்திக்கிட்டு இருந்தேன். பீஜீஎம் வேணும்னா அண்ணாமலையிலேருந்து, ரேக்கைக் கட்டி பறக்குதைய்யா பாட்டுப் போட்டுக்கலாம். அப்படிதான் இருந்துச்சு. நமக்காகவே வாழ்ற மாதிரி ஒரு உணர்வு. அந்த ஃபீலே தனிங்க. கேக்றதவிட அனுபவிச்சாதான் புரியும்.
மலாக்கான்னா, வரலாற்றத்தளம்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா அங்க அப்படி என்னா இருக்குன்னு கேக்றவங்களும் இருக்காங்க. எனக்குச் சின்ன வயசிலிருந்தே ராஜா கதைகள், புராண கதைகள் கேட்குறதுல்ல ரொம்பவே ஆர்வம். அப்போதிருந்தே இந்த ராஜாலாம் எப்படி வாழ்ந்திருப்பாங்க, அவுங்களோட அரண்மனை எப்படி இருக்கும்ன்னு கற்பனைப் பண்ணி பார்த்ததுண்டு. அப்படிப்பட்ட ராஜாக்கால பைத்தியம் நானு.
மலாக்காவுக்குப் போனப்போ நிறைய பழங்கால கட்டிடங்களைப் பார்த்தேன். அது ஏனோ தெரில, அங்க சிதலடைந்திருந்த கட்டிடங்களையும் கோட்டைகளையும் பார்க்கும் போது எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. அங்கு பார்த்த கட்டிடங்கள் வெறும் கட்டிடங்களாக மட்டும் எனக்குத் தெரியல்லைங்க. ஏதோ உயிரோட்டம் கொண்ட உருவங்கள் மாதிரிதான் இருந்துச்சு. சில சமயங்களில் அந்த கட்டிடங்கள் என்னம்மோ என்கிட்ட சொல்றது போலவும் தொனுச்சு. ம்ம்ம் ஒருவேளை, இதெல்லாம் மாறாம இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்? இங்கிருந்த மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் இப்படியே கற்பனை பண்ணிக் கிட்டேதான் என் நாட்கள் அங்கு நகர்ந்தன. ஆனா அதுல எனக்கு சந்தோஷம்தான்.
ஆனா அந்த சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்குமான்னு எனக்குத் தெரியுல. இப்படில்லாம் பேசனாலே ஓடிப் போறவங்கதான் அதிகம். என் அனுபவத்துல்ல சொல்றேன். என்னை மாதிரி யோசிக்கிறவங்களையும் பழங்காலத்தை ரசிக்கிறவங்களையும் நான் இன்னும் பார்க்காததும் என்னோட சோலோ ட்ரீப்க்குக் காரணம் எனலாம். ரசனைகள் என்பது எல்லோருக்கும் வேற வேறதானே.
இன்னிக்கு நாம்ப வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையானது இதற்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களின் பிம்பங்கள்தான். வெறும் பிம்பத்தை மட்டும் அனுபவிப்பதை விட, அந்த நிஜத்தையும் ரசிக்க வேண்டும் என்பதுதான் என் தேடல். எனக்குத் தெரிஞ்சவங்க, என்னைப் பார்த்து "யூ ஆர் ஓல்ட் சோல்"னு சொல்லுவாங்க. அதற்கான அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிஞ்சது. பழைமை மீதான என் மோகம் தீர மேலும் பல தனிப் பயணங்களுக்கு முடிவு செய்தேன். அதன் முடிவின் தொடக்கம்தான் பாலி தீவில் சில தினங்கள். என் சாயலில் சொன்னால் #சொலோட்ரிப்எட்பாலி
பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்கிழகாசியாவில் பரந்து விரிந்து கிடந்த சனாதனத் தர்ம நம்பிக்கைகளின் எஞ்சிய சான்றுதான் பாலி தீவு. அந்த கடவுளர் தீவில் என் நாட்கள் எப்படி நகர்ந்தன? விரைவில்.....
எழுத்து, ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment