அண்மையில் ஆயாம் என்பவரைச் சந்தித்தேன். ஆயாம் என்றால் கோழி என்று எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் எப்படி இவருக்கு அந்த பெயர் வந்தது என்ற கேள்வி என் மூளையைச் சுரண்டிக் கொண்டேன் இருந்தது. உடனே கேட்டு விட்டேன். உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று ஆயாமிடம் கேட்டபோது சின்ன வயதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி என்னோடு பகிர்ந்து கொண்டார். 

சின்ன வயதில் ஆயாம் ரொம்ப பயந்து சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஒரு முறை  கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவருக்கு விக்கல் வந்திருக்கிறது. அந்த விக்கல் பண்ண வேலைதான் இது. அது சாடா விக்கல் அல்ல, மண்லபத்தையே அதிர செய்திருக்கிறது. அந்த சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த பேச்சாளர் ஒலிப்பெருக்கியில் ஆயாமின் இயர்ப் பெயரை உரக்கக் கூறி கிண்டலடித்திருக்கிறார். மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ஆயாமைப் பார்த்துப் பலமாக சிரித்திருக்கிறார்கள்.  அது தமக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதான், மண்டபத்தை விட்டு வெளியேறி வகுப்பறை ஒன்றில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அதை கண்டு பிடித்த சக மாணவர் கோழியைப் போல் பயந்து ஒளிந்து கொண்டாயே என்று கிண்டல் செய்ய,  ஆயாமின் பெயர் ஆயாமாக மாறியது. பிற மாணவர்களும் அதையே அவரைக் கேலி செய்ய பயன்படுத்தினர். 

அந்த கேலிகிண்டல் சிறிது காலம் போன பின்பு பகடிவதையாக மாறியது.. அது ஆயாமுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அஞ்சி ஒதுங்கிய ஆயாம் ஒரு கட்டம்,  நாம் ஏன் பிறருக்கு பயப்பட வேண்டும்? எதற்கு இந்த கேலிகளுக்கு இசைந்து போக வேண்டும் என்ற யோசிக்க ஆரம்பித்தார். எந்த சொல்லைக் கொண்டு நம்மை கேலி செய்கிறார்களோ அந்த பெயரையே தனது அடையாளமாக மாற்றி கொள்ள நினைத்தார் ஆயாம். எதிர்மறையானவற்றை நேர்மறையாக மாற்றத் தொடங்கினார். இன்று தனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆயாம் என்ற Fared Ayam.  

இன்று மலாய் திரை உலகம் நன்கு அறிந்த கதாசிரியர், நடிப்பு பயிற்றுனராக இருந்து வருகிறார். இது வரை நான் பார்த்திறாத வித்தியாசமான மனிதர் இவர். ஒருவரின் தோற்றத்தைக் கண்டு எடைப் போடக் கூடாது என்பார்கள். அது ஆயாமைப் பொருத்த மட்டிலும் முற்றிலும் உண்மை. வாராத நீண்ட கூந்தக், கந்தலான டீ சட்டை, கலர் கலரான அரைக்கால் சட்டை, கைக் கால்களில், மணிகளும், மத சின்னங்களும் என பார்ப்பதற்கே வித்தியாசமாக இருப்பார் ஆயாம்.  

வாழ்க்கை பல வண்ணங்களால் ஆனது. அதை நாம்தான் கருப்பு வெள்ளை என இரு வண்ணங்களாக பார்க்கிறோம். வண்ணமயமான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வோம் வாழ்க்கை அழகாக இருக்கும். என்ன பார்க்கிறீங்க இதுவும் அவர் கூறியதுதான். பேதங்களை ஏற்றுக் கொள்வோம்.. எதிர்மறைகளை நேர்மறையாக்குவோம். வாழ்த்துகள்.

எழுத்து,
ஸ்ரீ குமரன் முனுசாமி


Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி