பாலியில் தனியே பயணம்- பாகம் 1

தனியே ஒரு நெடுதூரப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் தோன்றியது. பாலிக்குப் போக வேண்டும் என்பது என் மனதில் பல நாளாக இருந்த ஆசை. சரி பாலிக்கே போகலாம் என்று முடிவெடுத்தேன். பாலி என்றால் கடவுளர் தீவுன்னுச் சொல்லுவாங்க. உண்மையில் அது கடவுளின் தீவுதான். எங்கு பார்த்தாலும் கோயில்களும், கடவுளின் விக்ரகங்களும்தான் தென்பட்டன. பாலிக்குப் போக முடிவெடுத்த மறுகணமே, டிக்கெட் புக் பண்ணிட்டு, அங்கு என்ன என்ன இடங்கள் இருக்கின்றன, போக்குவரத்து வசதிகள் எப்படி, எங்கு தங்கினால் சௌகரியம், எப்படியெல்லாம் ஜாக்கிரடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு அலசு அலசிவிட்டேன். முதல் நாள் பாலியில் காலடி எடுத்து வைக்கும் போது அங்கு இரவாகிவிட்டது. ஏர்ப்போட்டை விட்டு வெளியேறும் போதே, டெக்சி காரர்களும், கோஜேக்கும் என்ன சுற்றி வலைத்து விட்டனர். கொஞ்ச நேரத்தில் நான் மூச்சுத் தெணறி போனேன். என்னைக் கட்டாயப்படுத்தி அவர்கள் டெக்சியில் வர சொன்னார்கள். என்ன ஆனாலும், அவர்கள் கார்களில் ஏறக்கூடாது என முடிவெடுத்து வேகமாக மேய்ன் ரோட்டுக்கு நடந்தேன். எல்லாம் ஒரு வகையான பயம்தான். மேய்ன் ரோட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு டெக்சி அங்கிள் வந்தாரு, பார்க்க நல்லவராக தெரிந்தார், அவர் காரில் ஏறி நான் போக வேண்டிய ஹோட்டலை அடைந்தேன். சுமாரான ஹோட்டெல்தான். இருந்தாலும் வசதியாகத்தான் இருந்தது. அறைக்குப் போனதுமே, ஒரு குளியலைப் போட்டுவிட்டு, நாளைக்கு எங்கெங்கெல்லாம், போகலாம் என லீஸ்ட் போட்டேன். வருமோதே, விமானத்திலேயே சாப்பிட்டுவிட்டதால், பசிக்கவில்லை, உடனே உறங்கி விட்டேன்.

காலையில் எழுந்ததும், பசியாறுவதற்காக, ஹோட்டல் அருகே இருந்த கடை வரிசைகளுக்குச் சென்றேன். நாம் பார்த்த உணவுகள் அங்கெங்கே கிடைக்கப் போகிறது. பீஹூன் மாதிரி எதையோ பிரட்டி வைத்திருந்தார்கள். அதோடு ஒரு ஆம்லெட். நல்ல சுவையாகத்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் கோஜேக் புக் பண்ணேன். ஒப்ஸ் கோஜெக் என்றால், மோட்டார் சைக்கிள் டெக்சி. பாலியில், பார்க்கிற இடங்களெல்லாம் இவர்கள் சாம்ராஜ்யம்தான். கோஜேக் வந்ததும், என்னை ஒரு கலைக்கூடத்தில் விடச் சொன்னேன். அங்குப் போய் பார்த்தால், அந்த கலைக் கூடம் வேறு இடத்துக்கு மாத்தியாச்சாம். பிறகு இன்னொரு கோஜேக்கைப் புடிச்சு, கருடா விஷ்ணு காஞ்சனா என்ற இடத்தை அடைந்தேன். ஒரு பிரமாண்மான் விஷ்ணு சிலையை இங்கு காணலாம். விஷ்ணு பகவான் கருட பகவான் மீது காட்சளிப்பதான் அந்த சிலை அமைந்திருக்கும். மரகத பச்சை நிறத்தில் அச்சிலை, தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். கருடா விஷ்ணு காஞ்சனா ஒரு பாரம்பரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. இங்கு அட்டவணையிட்டப்படி, பாரம்பரிய நடன படைப்புகள் வழங்கப்படுகின்றன. காலை 10 மணி தொடங்கி இரவு 7 மணி வரை பாலியில் பிரசித்திப்பெற்ற நடனங்களை அங்கி கண்டு ரசிக்கலாம். ஆனால் என்னால் அவ்வளவு என் பொழுதை அங்கு களிக்க முடிய வில்லை. என் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு அடுத்த இடத்துக்கு ஆய்த்தமானேன்.  கோஜேக் புக் பண்ணலாம்னா, அடைமழை அடித்து வாங்கியது. சரி இது வேலைக்கு ஆகாது என்று, கோகார் புக் பண்ணி உபுட் புராதான ஆலயத்தை நோக்கி பயணிக்கலானேன். உபுட் ஓர் அழகான உயர்ந்த நிலப்பரப்பு. அங்கு பல புராதான ஆலயங்களோடு, அருகிலே வானரவனமும் உள்ளது. உபுட் வளாகத்திற்குள் நுழையும்போதே  எச்சரிக்கை வழங்கப்படும். உடன் கொண்டுச் செல்லும் உடமைகள் கவனம். இங்குள்ள குரங்குகள் பறித்துச் செல்லக்கூடும் என்று. எப்போதும் சொல்லும் எச்சரிக்கைத்தானே என்று நான் சகஜமாக இருந்து விட்டேன். ஆனால் அங்குள்ள குரங்குகள் உண்மையில் பயங்கரமானவைத்தான். கொஞ்சம் தயங்கி தயங்கி அந்த வளாகத்திற்குள் நுழைந்தேன். சும்மா சொல்லக் கூடாது அவ்வளவு அழகான காட்சிகளை இதுவரையில் நான் கண்டதில்லை. உயர்ந்தப் பகுதியில் இருந்து கடற்கரையைப் பார்க்கும் போது அவ்வளவு அழகாக காட்சி அழித்தது. இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது அந்த காட்சி என் கண் முன்னே வந்து போகின்றது. அலை ஓசையோடு மெல்லிய காற்று என்னைத் தீண்டிய தருணம் சொல்லி விளக்க முடியாது. அதை நேரடியாக உணர்ந்தாலே புரியும்.

தென்கிழக்காசிய நாடுகளில் கொடிக்கட்டிப் பறந்த இந்து சாம்ராஜ்யம் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு முடிவுக்கு வந்தது. இருந்த போது பாலி தீவில் மட்டும் இன்னும் இந்து மதம் தலையோங்கி நிற்கிறது. இந்திய இந்து மதத்தைக் காட்டிலும், பாலி இந்து ஆகமம் கொஞ்டம் மாறுப்பட்டதே. ஆனாலும் இந்திய இந்து மதத்தை தழுவிய இக்குள்ள நம்பிக்கைகள் உள்ளன. குறிப்பாக கடவுள் உருவச் சிலைகள். சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், ஸ்ரீதேவி, காளி, சரஸ்வதி என எல்லாத் தெய்வங்களின் தொன்மையான விக்ரகங்களையும் அங்கே காணலாம். உபுட்டில் பல கோயில்கள் ஆங்காங்கே இருந்தாலும், கோயில்களுக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனாலும், அந்த தொன்மையான கட்டிடங்களைத் தொட்டுப் பார்க்கும் போது ஒரு வித உணர்வு எனக்குக் கிடைத்தது.

தொடரும்...

எழுத்து,
ஸ்ரீ குமரன் முனுசாமி




Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி