இந்த நொடிதான்..
ஒர் ஊரில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே ஏதோ மனக்குறையுடனே இருப்பார். இது சரியில்லை அது சரியில்லை என குறைக் கூறிக் கொண்டிருப்பதே பொழுதுகாக வைத்திருந்தார். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசமாட்டார். நாளாக நாளாக அவரின் குணம் இன்னும் மோசமானது. அவரின் பேச்சுப் பலரின் மனதைப் புண்படுத்தியது. எல்லோரும் அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர். அவருடம் பேசினாலே நமக்குள் இருக்கும் சந்தோஷம் போய்விடும் என்ற பயத்தில் அவரை கண்டாலே அஞ்சி ஒதுங்கினர். இப்படியே காலம் ஆக ஆக, ஒரு நாள் அவரை பற்றிய ஒரு புரளி பரவலானது. அந்த பெரியவர் எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதாக கூறப்பட்டது. இதை நம்ப இயலாமல் எல்லோரும் அவரை நேரில் காண சென்றனர். கூறியது போலவே அவர் எல்லோருடனும் சிரித்துப் பேசினார். மகிழ்ச்சியாக காணப்பட்டார். ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம், என்ன பெரியவரே என்ன செய்தி. இன்று எதோ உங்களிடம் மாற்றம் தெரிகிறதே என்று வினாவினர். அதற்கு அந்த பெரியவர் " இதுவரையில் சந்தோஷம் என்பது எதுவென்று தெரியாமல் தேடி தேடி அலைந்தேன். ஆனால் இனி சந்தோஷத்தை தேடமால், வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்று முடிவுப் பண்ணி விட்டேன். அந்த முடிவு தந்த சந்தோஷம்தான் இது" என்றார்! வாழ்க்கை என்பது நாம் வாழ்கின்ற இந்த நொடிதாங்க. இந்த நொடியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதை விட்டுட்டு சந்தோஷம் என்ற வார்த்தையைத் தேடி அலைகிறோம். நம் தேடல் குறுகியதாக இருந்தால் பரவாயில்லை. நீண்டதாக இருந்தால்?.மறந்து விடாதீர்கள் நம்வாழ்க்கையே குறுகிய பயணம்தான்!
எழுத்து..
ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment