வந்த மல, போனா டோட்!
அட ஆமாங்க. இந்த உலகம்தான் உங்களை தனிமைப்படுத்துது. உங்கள சுத்தி இருக்கறவங்கதான் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கறாங்க. எல்லாமே சரி. ஆனா நீங்க என்ன பண்ணீங்க?. தனிமப்படுத்துற உலகத்துக்காக, உங்களுக்காக ஏங்கிகிட்டு இருக்குற உலகத்தை புறக்கணிக்கிறீங்க. மனம் விட்டு பேச நினைக்கிறவங்கள விட்டுட்டு, மன அழுத்தம் கொடுக்கறவங்களதான் தாங்கி பிடிக்கிறீங்க. ஒன்னு மட்டும் புரிங்சுக்கோங்க, நீங்க நெனைக்கிற மாதிரி நீங்க தனிமையில இல்ல. நீங்கதான் உங்களை தனிமைப்படுத்திக்கிறீங்க. இப்படி தப்பெல்லாம் உங்க பக்கம் வெச்சுட்டு சுத்தி இருக்கறவங்களா குறை சொன்னா எப்படி.
ஐய்யய்யோ, நான் என்னமோ பகடிவதை பன்றவங்களுக்கும், அடுத்துவங்கள மன அழுத்தத்துக்கு ஆளாக்கிறவங்களுக்கும் சப்போர்ட் பன்றேன்னு நெனைக்காதீங்க. அவுங்களுக்கு என்னிக்குமே என் ஆதரவு கிடையாது. ஆனா அவுங்களுக்கெல்லாம் மூக்கா கொடுக்காதீங்கன்னுதான் சொல்றேன்.
தற்கொலைக்கு, மன அழுத்தம்தான் முக்கியக் காரணம்னு சொல்றாங்க. ஆனா அந்த மன அழுத்தத்துக்கு அடிப்படை காரணம் சுய விருப்பு வெறுப்புகள்தான். அது தீவிரம் அடையும் போதுதான் எல்லா பிரச்னையும் வருது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. இத எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கணியன் பூங்குன்றனர் என்ற பெரியவர் சொல்லிருக்காரு. அப்போவே அவருக்கு இருந்த அந்த ஞானம், இந்த காலத்த்ல உள்ளவங்களுக்கு இல்லையே என்பதில்தான் வருத்தம். நம்முடைய சிந்தனையும் செயலும் தான் நமது அடுத்த கட்ட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அதெல்லாம் விட்டுட்டு, இந்த உலகம் சரியில்லை, இந்த சமுதாயம் சரியில்லைன்னா, நீங்க இன்னும் உலகத்தோட ஒட்டவே இல்லைன்னுதான் அர்த்தம்.
சமுதாயத்தைப் பத்தி குறை சொல்ல ஆயிரம் இருக்கு. இருக்கட்டும் அதெல்லாம் இருந்தாதான் வாழ்க்கையில்ல நாம எதிர்க்கொள்ள சவால்கள் முளைக்கும். சவால்கள் இருந்தாதான் வாழ்க்கையே சுவரஸ்யமா இருக்கும். இல்லல்ல வாழ்க்கைன்னா ஸ்மூத்தா இருக்கணும்னா, ஆசைகளையும் லட்சியங்களையும் தூக்கி எறியுங்க! காதலையும்தான்! அத விட்டுப்புட்டு இதுவும் வேணும் அதுவும் வேணும்னா எப்படி. இதுதாங்க நமக்கு இருக்குற பிரச்னை. ஒரு இலக்கை அடையுணும்னா ஆயிரம் சவால்களைக் கடந்துதான் ஆகணும். அதுக்கு நீங்க தயாரா இருந்துதான் ஆகணும். ஒரு தோல்வி ரெண்டு தோல்வின்னா பரவாலைங்க. தோத்துக்கிட்டே இருந்தா என்ன பண்றதுன்னு கேட்டீங்கன்னா, சாகற வரைக்கும் தோத்துகிட்டே இருக்க மாட்டீங்கன்னுதான் நான் சொல்லுவேன்.
மத்தவங்க சொல்ற தோல்விதான் உங்கள தற்கொலைக்குத் தூண்டுதுன்னா, நீங்க ஏமாந்துக்கிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். தற்கொலைத்தான் நீங்கள் உங்களுக்கே அமைச்சுக்கிற நிரந்தர தோல்வி. உயிரை பிடுங்கும் மன அழுத்தம்தான். புரியுது. ஆனா அதை நீங்க உடைச்செறியத்தான் வேணும். கதறி அழுங்க. சுத்தி இருக்கிறவங்ககிட்ட பேசுங்க. கேட்க ஆளில்லையா சோசியல் மீடியால்ல உங்க மனகுமுறலைக் கூறுங்க. டிக்டோக் போட்டாதான் அவுங்க நெகடிவ்வா பேசுவாங்க. நாம மன உளைச்சல்ல இருக்கிறோம்னு போட்ட எல்லோரும் நல்ல விதமாதான் பேசுவாங்க. இப்ப எல்லோரும் நல்லா அட்வாய்ஸ் பண்றாங்க. அதனால நீங்க கொஞ்சம் பரந்த சிந்தனையோடு இருங்க. தைரியமா இருங்க. இன்னிக்கு இல்லன்னா என்னிக்காவது நம்ம வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி மாறும்னு நம்புங்க. ஏன்னா இந்த பிரபஞ்சம் நீங்க நெனைக்கிறதையும் பேசறதையும் கேட்டுக்கிட்டுதான் இருக்குது. அனுபவத்துல சொல்றேன்!
அப்புறம் நீங்க.. அட்வாய்ஸ் பண்றவங்களே. உலகத்தை ஒரடியா திருத்திராதீங்க. அப்பப்போ இந்த மாதிரியான அழுத்தங்களும் நமக்கு தேவை. அப்போதான் ஜெயிக்கணுங்கிற வெறி வரும், ஜெயிச்சா அதுல ஒரு சுகம் கிடைக்கும். சோ எதார்த்தத்தை புரிஞ்சுக்கோங்க. பல தரப்பட்ட மனிதர்களோடு வாழ பழகிக்கோங்க! அதுதான் நமக்கு நல்லது. இவ்ளோ சொல்லியும் மனசு கேக்கமாட்டுதா. ஒரு ஸ்லோகம் சொல்லித் தரேன். அத 100 தடவ சொல்லுங்க. எல்லாம் சரி ஆயிரும்.
வந்த மல.. போனா டோட்! இத ஆழ் மனதில் இருந்து சொல்லி பாருங்க! லைஃப் எப்படி மாறுதுன்னு பாருங்க. அட நம்புங்கங்க. இந்த மாதிரியான குட்டி குட்டி நம்பிக்கையிலத்தான் நிறைய பேரு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
ஸோரிங்க, நான் மனோதத்துவம் படிக்கல. எனக்கு இப்படிதான் பேச வரும்!
-எழுத்து-
ஸ்ரீ குமரன் முனுசாமி
தனிமையில் உள்ளீர்களா? மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? உங்கள் மன ஆறுதலுக்கு befrienderskl-க்கு அழையுங்கள். 03-76272929 (call charges apply). மேல்விவரங்களுக்கு https://www.befrienders.org.my/ அகப்பக்கத்தை நாடுங்கள்!
Arumaiyana karuttu nanba
ReplyDeleteநன்றி🥰
DeleteArumai!!!Arumai!!!Arumai!!!
ReplyDeleteநன்றி🥰
DeleteWell said anna❤️
ReplyDeleteமிக மிக அருமையான பகிர்வு அண்ணன். 😍😍😍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete