தைப்பூச வாழ்த்துகள்!



"தைப்பூச வாழ்த்துகள்".. இதை பார்த்ததும் பொங்கி எழும் போராளிகளே பொறுமை.. இப்படி கூறுவதால் எதுவும் மூழ்கி போக போறதும் இல்ல. அது குத்தமும் இல்ல. நெறி..ம்ம்ம் அது சரியான வார்த்தையா இருக்காது.. ஒழுக்கம்.. ஒழுக்கத்தோடு தைப்பூசத்தை கொண்டாடறதுக்கே நாம இன்னும் எவ்வளவோ போராட வேண்டியது இருக்கு. அத பத்தி பேசலாமே. ஆனா இந்த வருஷம் அத பத்தி பேச அவசியம் இல்லதான். அதனால பரவால..

ஒன்னு மட்டும் புரியலைங்க, மொழியையும் கலாசாரத்தையும், இல்ல சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் எத்தன காலத்துக்குதான் ஸ்தேண்டடாய்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க போறீங்க? இருக்கற மொழியயே இங்க யாரும் சரிய பேசமாட்டுறாங்க. இதுல மொழிய இன்னும் தூய்மை படுத்தறதால என்ன கிடைக்கப்போது உங்களுக்கு. இப்போ நாம பேசற மொழி ஆதி தமிழர் பேசிய மொழியின் துளி அளவுதான். பிரித்து எடுக்க முடியாத அளவுக்கு மத்த மொழியோட கலப்பும் இருக்கு. பாலையும் தண்ணீரையும் பிரித்து எடுக்கும் அன்னமாக இருந்தால் பரவால...நாம மனுசங்க.. ஆராய்ஞ்சு தெளியுறதுக்குள்ள பல ஜென்மம் போயிரும்...

இந்த எதார்த்ததத்தான் நெறைய பேரு புரிஞ்சக்க மாட்டாங்க. எப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அது சாத்தியம் இல்ல. இதை ஆணித்தரமாகவே சொல்லலாம். தமிழ் மொழியில ஆரிய  மொழி கலப்பு மட்டுமல்ல, பாரசீக, லத்தீன், ஆங்கீலேயம் என அடுக்கிக்கிட்டே போகலாம். ஆனா அதுக்கெல்லாம் தமிழ்ல வார்த்தைகள் இல்லன்னு இல்ல. இருக்கு, வசதிக்கு ஏத்த மாதிரியும் எடத்துக்கு ஏத்த மாதிரியும் அந்தந்த கால தமிழர்கள் ஏத்துக்கிட்டாங்க. 

சங்க இலக்கியங்கள் தொட்டு தற்கால இலக்கியங்கள் வரை மத்த மொழி கலப்பு இருக்குது. இருந்துகிட்டுத்தான் இருக்கு. இது ஏத்துக்குற பக்குவம் எத்தனை பேருக்கு இருக்குதுன்னு தெரில. மொழிக்கலப்பு, மொழிஎடுப்பு எதுவா இருந்தாலும், அதற்கான காரணம் இருக்கும், கவிதை நடைக்கோ, சொல்லாடலுக்கோ அவசியம் ஏற்பட்டிருக்கலாம். இப்போ, பல சினிமா பாடல்கள்ல அழகுக்காக அங்க அங்க வேற்று மொழி வார்த்தைகள் கலக்கப்படுத்துல அந்த மாதிரித்தான். அதுல தவறு இல்ல. ஆனா இருக்குற தமிழ் வார்த்தைகள்ல மறந்திட கூடாது. அதுதான் முக்கியம்.

மொழிய வளர்க்க போறாடரும்னு சொல்லுறவங்களுக்கு ஒரு நினைவுறுத்தல், தமிழ் வளர்ந்து படர்ந்த மொழி, அத தண்ணீ ஊத்தி வளர்க்க அவசியம் இல்ல. நாமத்தான் நம்மல வளர்த்துக்கணும். அறிவிலும் ஆற்றலிலும்.புது புது வார்த்தைகளை உருவாக்குறேன்னும் இருந்த வார்த்தைகள்ல தொலைச்சுக் கிட்டு இருக்கோம். "நீர் வீழ்ச்சி" இது தமிழா?.. யார் கண்டுபுடிச்சான்னு தெரில. வாட்டர் ஃபோல்ங்கற ஆங்கில் சொல்ல அப்படியே மாத்திருக்காங்க.  ஆனா, அதுக்கு அருவின்னு அழகான் தமிழ்ச் சொல் இருக்குன்னு மறந்துட்டாங்க போல..

கன்னித் தமிழை முதுமையாக்காத்தீங்க. அதாவது தமிழ்ல, வயசானவங்கத்தான் பேசுவாங்க மாதிரி ஆச்சு. இந்த காலத்து பசங்க தமிழ்ல பேசவே கஷ்டப்படுறாங்க. அதைபத்தி பேசுங்க. எப்படி தமிழ்ல இலகுவான முறையில் அவுங்கள்ல பேச வைக்கலாம்னு. தமிழ் வெறும் ஏடுகளிலும் ஊடங்களிலும் இருந்தா மட்டும் போதுமா?..எவ்வத்துறைவது உலகம் அவ்வத்துறைவது அறிவு. வள்ளுவர் சொன்னது. காலத்துக்கு ஏத்தமாதி மொழிய படர வையுங்க..

இன்னும், கம்பியூட்டர் முன்னுக்கு ஒக்காந்துக்கிட்டு, பொங்கல்தான் தமிழர் புத்தாண்டு, சித்திரை புத்தாண்டே இல்ல, தைப்பூச வாழ்த்துன்னு சொல்லக்கூடாதுன்னு நேரத்தை வீணடிக்காதீங்க. பண்டிகைகள் தனி மனித சந்தோஷத்துக்காக கொண்டாடறது. அவுங்களுக்கு எப்படி புடிக்குதோ அப்படி கொண்டாடுவாங்க. எப்படி வாழ்த்து சொல்லுன்னும்னு தோனுதோ, அப்படி சொல்லுவாங்க. முறைகேடாக நடந்து கொள்ளாத வரை எதுவும் தப்பில்ல. 

வாழ்க்கைய ரொம்ப ஆராய்ந்து வாழாதீங்க. பின்ன அதோட அழகை ரசிக்க முடியாம போயிரும். "அபூர்ணம்"  நிறைவுப்பெறாமை, முழுமைபெறாமையில் உள்ள அழகை ரசிங்க. நாம மியூஸியம்ல இருக்குற காட்சி பொருட்கள் இல்ல, லேபெல் போட்டு ஆடாமல் அசையாமல் இருக்க. கொஞ்சம் சீறல் இருக்கணும். நெறைய சிரிப்பு இருக்கணு.சரியும் இருக்கணும்.. கொஞ்சம் தவறும் இருக்கணும், அதோடு, அதை திருத்திக்குற பக்குவமும் இருக்கணும். அப்போதான் நீங்க வாழ்ற வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்கும். கோ வித் தே ஃப்லோ.. அபூர்ணம் மீளா வர்ணம்.

"மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம்- கணியன் பூங்குன்றனார்"

எழுத்து,
ஸ்ரீ குமரன் முனுசாமி


Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி