கந்தா கடம்பா கருணாகரனே
குமரா குகனே குணமிகு வேலா குறமகள் நாயகனே!
ஆறுமுகமானவா ஆனைமுக சோதரா ஆறுபடை வீடவனே!
ஆளும் குலம் காக்கவே, ஓடி வர வேண்டும் நீ, வேலை எடு வேலவனே!
மௌனம் ஏனோ எந்தையே.. உருகி துதித்தோம் நின்னையே!
காக்க வேண்டும் எம்மையே.. காண வேண்டும் உன்னையே!
கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே!
குமரா குகனே குணமிகு வேலா குறமகள் நாயகனே!
உனை நாடி வந்தேன்
புகழ் பாடி வந்தேன்- நீ
கேளாயோ வேல்முருகா?
உளம் உருகி நின்றேன்
உடல் வருத்திக் கொண்டேன்-நீ
பாராயோ மால்மருகா?
வாராயோ வேல்முருகா-குறை
தீராயோ மால்முருகா..
நீரின்றி ஏது புவி-இங்கு
நீயின்றி ஏது கதி?
கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே!
குமரா குகனே குணமிகு வேலா குறமகள் நாயகனே!
ஆறுமுகமானவா ஆனைமுக சோதரா ஆறுபடை வீடவனே!
ஆளும் குலம் காக்கவே, ஓடி வர வேண்டும் நீ, வேலை எடு வேலவனே!
அருள் காட்சித் தந்தாய்
அகம் குளிர வைத்தாய்-எம்
அகரமுமானவனே!
அன்று சொன்ன குறை-
இன்று இல்லை என- நான்
தெளிந்தேன் பெருமாளே!
வந்தாயே வேல்முருகா
குறைதீர்த்தாயே மால்மருகா!
கண்டேனே என் பரனே- நான்
சேர்ந்தேனே உன்னடியை!
கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே!
குமரா குகனே குணமிகு வேலா குறமகள் நாயகனே!
ஆறுமுகமானவா ஆனைமுக சோதரா ஆறுபடை வீடவனே!
ஆளும் எங்கள் நாயகா, சக்தி சிவ பாலகா, கல்லுமலை வேலவனே!
மௌனம் கலைந்தாய் எந்தையே.. உருக வைத்தாய் என்னையே!
முருகா முருகா சரணமே, பயனடைந்ததென் ஜனனமே
கந்தா கடம்பா கருணாகரனே கல்லுமலை ஆண்டவனே!
குமரா குகனே குணமிகு வேலா காப்பாயே வேல்முருகா.. காப்பாயே வேல்முருகா!
எழுத்து,
ஸ்ரீகுமரன் முனுசாமி
Comments
Post a Comment