மலேசியத் தமிழ்



வெறும் தொடர்பு கருவியாக இருந்து, உணர்வுகளோடு கலந்து, ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பதுதான் மொழி. மனிதன் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எழுப்பிய ஒலிகள் சொற்களாக மருவி, அந்த சொற்கள் பல பரிமாணங்களைக் கண்டு, ஒரு மொழிக்குள் அடைக்களம் காண்கின்றன. என்னத்தான் மனிதன் மொழிகளை வகைப்படுத்தினாலும், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மொழிகள் மாற்றம் காண்கின்றன.சொல் உச்சரிப்பு மாறுபடுகின்றது. ஒரு சில சொற்கள் காலத்தால் மறைந்திருக்கின்றன. ஒரு சில சொற்கள் இடத்திற்கும், காலத்திற்கும் உச்சரிக்கும் நாவிற்கும் ஏற்றாற்போல் மாற்றம் கண்டிருக்கின்றன. வேற்று மொழி படையெடுப்பால், ஒரு சில சொற்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் காலத்தோடு அழிந்தும் போயிருக்கின்றன. இப்படி பல தாக்கங்களைக் கடந்து இன்னும் உயிர்த்திருக்கும் செம்மொழிகள் சிலவே. அதில் ஒன்று தமிழ் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

ஆனால், ஆதியில் பேசப்பட்ட எழுதப்பட்ட தமிழும், இப்போது பேசுகின்ற எழுதப்படுகின்ற தமிழும் ஒன்றா என்று கேட்டால். நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகின்றன. அதற்கு நம் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. இது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற இயல்பே. காலத்துக்கு ஏற்றாற்போல் மனிதம் மாறும் போது மொழி நடையும் மாறுகின்றது. 

ஏட்டுத் தமிழும், பேச்சுத் தமிழும் வேறு படுகின்றன. பேச்சுத் தமிழில் பல பிரிவுகள் இருக்கின்றன. அது இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும். தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும் "கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் சென்னை" வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவை. அவ்வாறே, இலங்கைத் தமிழ், சிங்கப்பூர் தமிழ், மலேசியத் தமிழ், மலாக்கா செட்டி தமிழ் (வேறொரு கட்டுரை தேவைப்படும்) என தமிழ் மொழி இடத்துக்கு இடம் கொஞ்சம் மாறுப்பட்டிருக்கின்றது. 

மலாயாவுக்குக் குடிபெயர்ந்த தமிழர்கள், ஆங்கிலம், மலாய், சீனமொழித் தாக்கத்தாலும் கண்ணில் பட்டதை விளங்கும் பொருட்டு தங்களுக்கென ஒரு சொல் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளனர். வடிவத்தையும், மேல்பரப்பையும், அல்லது வேறு அம்சங்களைக் கொண்டு பல பொருள்களுக்குப் பெயரிட்டுக்கின்றனர். ஒரு சில மலாய் சொற்களையும், ஆங்கில சொற்களையும், தங்களின் உச்சரிப்பு வசதிக்கு ஏற்றாற்போல், மாற்றி பயன்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட மலேசியத் தமிழ் சொற்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம். 

மலேசியத் தமிழ்:

பசியாறை- Breakfast

குசினி - kitchen

உப்புரொட்டி/தாவார்ரொட்டி/அம்பாசெகி ரொட்டி- Cream crackers

சூரா-Letter

வேலைக்காடு- Work Place/ Rubber Plantation

சுலுவாரு- Pants

கராசு-Hard

சுருக்கா-Fast

கம்பம்-Village

ஆயாக் கொட்டாய்- Nursery

சுந்தரி-own

தீம்பாரு-Rubber Plantation

வெட்டுரொட்டி/ வாரொட்டி- Bread

மேரொட்டி-Merry Biscuits

குண்ரொட்டி- crusty bun

டீசு-water tub

தக்கரு- ceramic water tub

தோம்பு- cylinder 

துருசு- straight

கொக்கோய்/கூவே- cakes

புங்குஸ்- Pack

கச்சரா- dirt

டெக்டரு- tractor

கயிலி- Sarung

நாட்டான் - Malay

சடையன் - Chinese

தண்டல்/ மண்டுரு/ கங்காணி- Estate Superviser

கெரானி - Estate Manager

கோல்கேட்டு-Toothpaste

வாங்கு - bench

வக்குலு- basket

ஜாமாக்கொட்டாய் - toilet

லப்ரூ- Eraser

கித்தா - Rubber

ஒட்டுப்பாலு / கித்தாம்பாலு- Rabber Milk

ஏத்துளி - Long tapping knife

மரக்கத்தி - apping knife

பாக்காரு - Fence


... தொடரும்

எழுத்து, ஸ்ரீ குமரன் முனுசாமி




Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி