கைப்படாத ரோசா



"சைந்தவி, கல்யாணம் பண்ணி இத்தன வருஷம் ஆச்சு.. எதுக்கும் டாக்டர போயி பாரு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காரு, நம்பர் தரட்டுமா?".. "இல்ல கனகா அதெல்லாம் வேணாம், கொஞ்ச நாள் ஆனா சரி ஆயிரும். சரி அப்புறம் பேசறேன். பாய்" சட்டென்னு ஃபோன்னெ வசிட்டேன். இல்லன்னா வளவளன்னு பேசுவா. வழக்கமான கேள்வி, வழக்கமான அதே பதில். எனக்கு பழகிப் போச்சு. எல்லோரும் அக்கறையில்தான் சொல்றாங்க. ஆனா, சொல்ல முடியாத சோகத்துல இருக்கறவளுக்கு ஒவ்வொரு தடவையும் அந்த கேள்வி தேள் கொட்டற மாதிரிதான் இருக்குது. 

கல்யாணம், ஆயிரங்காலத்துப் பயிரு, கடவுளால் நிச்சயிக்கப்பட்டதுன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கைய கடவுள் நிச்சயிச்சான்னு தெரில. நான்தான் எதாவது பாவம் பண்ணிட்டேனா. அப்போ எனக்கு நடக்குறது பாவம் இல்லையா. அது அடுத்த ஜென்மத்துல அவன் அனுபவிப்பானா?.. என்ன கணக்கு இது? எனக்கு சத்தியமா புரில. 

டாக்டரப்பாரு, இது சாப்டு பாரு, அத சாப்டு பாருன்னு சொல்றவங்க எல்லோரும், கல்யாணத்துக்கு அப்புறம் பிள்ளைய பெத்து சந்தோஷமா இருகறவங்கத்தான். என்ன மாதிரி இருக்கறவங்களுக்குத்தானே அந்த வலியும் வேதனையும் புரியும். ஆனா இந்த கேள்விய கேக்கறப்போ எனக்கு சிரிப்புத்தான் வரும். எதுக்குங்க டாக்டர பாக்கணும்?. எதாவது பண்ணி அதுனால ஒன்னும் நடக்காடின்னா பாக்கலாம். ஒன்னுமே பண்ணாம எதுக்குங்க பாக்கணும்.

பெண்ணுக்கும், உடல் இருக்கு, அந்த உடலுக்கும் தேவை இருக்குன்னு ஏன் யாருக்கும் புரிய மாட்டுது. இல்லறம், வெறும் மானசீக உறவால் மட்டும் தொடராது, நல்ல தாம்பத்யமும் அவசியம். இங்கு ஏது அதுக்கு வழி.. கல்யாணம் செஞ்சு 2வருஷம் ஆகியும் அவன் என் பக்கமே வரது இல்ல. ஏன்னு கேட்டா எதாவது காரணம் சொல்லி மலுப்புறான். சரி அவனுக்கு எதாவது பிரச்னை இருக்குமோன்னு, டாக்டர பாக்கலாம்னு சொன்னாலும் டென்ஷன் ஆகாரான். இப்படியே 2 வருஷம் ஆச்சு. எனக்கும் ச்சீ போன்னு ஆச்சு.

காதல் திருமணம்தான். அவன்தான் ப்ரோபோஸ் பண்ணான். லவ் பண்ணோம். அப்பக் கூட என்ன தீண்டனது இல்ல. ரொம்ப டீசண்டான பையன்னு நெனைச்சேன்.ஆனா இன்னிக்கு வரைக்கும் டீசண்டாவே இருப்பான்னு நெனைக்கல. எதுக்குத்தான் கல்யாணம் பண்ணான்னே புரில. ஒரு வேள கல்யாணம் பண்ணாலே பிள்ளை பொறக்கும்ன்னு நெனச்சுட்டானோ. ச்சே ச்சே அவ்ளோ வெள்ளந்தியெல்லாம் இல்ல.

"சைந்தவி, கோஃபி கெடைக்குமா.. குளிச்சிட்டு வந்துறேன்".. அவன்தான்.  வேல முடிச்சுட்டு வந்துட்டான். "ம்ம்ம்.. சரி கலக்கி வக்கிறேன்".. எப்படியோ குளிச்சு முடிச்சிட்டு லப்டோப் முன்னுக்கே உட்காந்துக்கப்போறான். அதுக்கு இவன் பேசாம லப்டொப்பையே கல்யாணம் பண்ணிருக்கலாம். தோ இப்போ ஃபோன்னு அடிக்குது. வாடா மச்சான் டின்னெர் போலாம்னு ஒருத்தன் சொல்லுவான்..உடனே மாஞ்சுக்கிட்டு போயிருவான். நான் வீட்ல பேன்னு ஒட்காந்துக்கிட்டு இருக்கணும்.

"ஹேலோ சயாங்".. "ஹேலோ".. "உஷ்.. யாரு சைந்தவியா, சோரி மா..ராகேஷ் குளிச்சாட்டான்னா, குளிச்சுட்டா எனக்குக் கோல் பண்ண சொல்லு" சட்டுன்னு ஃபோன்ன வெச்சிட்டாரு. யாரு, இவனோடு க்லோஸ் ஃபெரண்டுத்தான். அப்படி என்ன சயாங்கோ. இந்த ரொமண்டிக்கெல்லாம் என்கிட்ட இவன் காட்டனதே இல்ல. ஒரு வேள.. ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது...

ம்ம்ம்ம்... எதுக்கும், இவங்களோட வாட்சேப் கொன்வெர்சேஷன்னா பார்த்தா என்ன. நோ நோ, அது தப்பு. அவன் என்ன என்னிக்குமே சந்தேகப்பட்டதே இல்ல. நானும் அப்படித்தான் இருக்கணும்.. ஆனா என் மூளை பாரு பாருன்னு சொல்லுதே. ம்ம்... பார்த்திருவோம். "சயாங்".."சொல்லுடா".."மிஸ் யூ"..."மிஸ் யூ டூ".."நேத்து நீ... ச்ச்சீ.. இதுக்கப்புறம் என்னால படிக்க முடியாது. என்ன கண்றாவி இது. கடவுளே. இதுக்குத்தான் இவன் என் பக்கம் வரதே இல்லையா.. பின்ன எதுக்கு என்ன கல்யாணம் பண்ணா.. இப்ப நான் என்ன பண்ணட்டும்.

என் வாழ்க்கை அவ்ளோதானா?.. இதுக்குத்தான் இந்த ரெண்டு வருஷம் வேய்ட் பண்ணன்னா?. நீ யார வேணும்னாலும் லவ் பண்ணு, என்னா வேணும்னாலும் பண்ணு. என்ன யேன் டா கல்யாணம் பண்ண?. நான் என்ன டா பாவம் பண்ணேன். இந்த சொசாய்டிக்காவும் உன் குடும்பத்துக்காவும் ஒரு கல்யாணம் பண்ணனும்னு என்ன கல்யாணம் பன்னி என்ன வாழ்க்கைய நாசமாக்கிட்டல்ல. 

படிக்கிறீங்கல.. நீங்க சொல்லுங்க, நான் என்ன பண்ணட்டும் இப்போ. நானும் இந்த சொசாய்டிக்கு பயந்துக்கிட்டு இவன் கூடவே வாழவா. போடா டோட்ன்னு தூக்கிப்போட்டு போகட்டா? அப்படி போனாலும், இந்த கல்யாணத்த என் வாழ்க்கையிலேருந்து அழிக்கவே முடியாதுல்ல. இனி புது வாழ்க்கை ஆரம்பிச்சாலும், இந்த சொசாய்டி என்ன டிவோசின்னுதானே சொல்லும்.. ம்ம்ம்.. தாலிக்கட்டிக்கிட்ட ஒரே பாவத்துக்காக இப்போ நான் செகண்ட் ஹேண்ட் ஆயிட்டேன்ல. 

பாழாப்போன இந்த சொசாய்டிக்குத் தீர்ப்புத்தானே கொடுக்கத் தெரியும், தீர்வா கொடுக்கும். ஆனா என் வாழ்க்கைக்கான தீர்வு என்னன்னு எனக்குத் தெரியும். இனி எவனும் எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு கஷ்டத்தக் கொடுக்கவே கூடாது. இவனோடு கௌரவத்துக்கு நான் பலிக்கெடாவா.. இப்போ நான் கலக்குற கோஃபிக்கு அவன்தான் பலிக்கெடா... வரெண்டா... 

எக்ஸ்க்யூஸ்மீ... அப்படில்லாம் பண்ணமாட்டேன். பயப்படாதீங்க. நிதானமாத்தான் முடிவு எடுக்கணும். அண்ண குளிச்சுட்டு வரட்டும். பாத்துக்கலாம்.. [செத்தான் சிவனாண்டி]


எழுத்து, ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

  1. நல்ல எழுத்தாக்கம் நண்பா. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இரட்டை வால் குருவி