மழை நின்ற பின்பும் தூறல்




திரைபடங்களில் காணாத மிக அழகான காட்சிகள் சில சமயம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும். இருளுக்கு மத்தியில் ஒளி வீசிக் கொண்டிருந்த முழுமதியும், இசையை நிறைவு செய்த நிசப்தமும்.. மனசுக்குப் பிடித்த ஒருவர் மிக அருகிலும், கைகளில் இரு கப் கோஃபியும், கண்களில் நிறைந்தோடிய காதலும், இதைவிட அழகான காட்சி இதுவரை கற்பனையிலும் கண்டதில்லை என்றிருந்தது..

காதல் .. உடல் எனும் தூரிகையின் வழி, உணர்வுகள் எனும் வர்ணங்களால் ஆன மிக அழகான ஓவியம். உணர்வுகள் நிலை மாறினால் அந்த ஓவியம் அலங்கோலமாகிறது. சரிபடுத்த முடியாத நிலையில் விழுகிறது.. 

காதலும் காவியம்தான், தொடக்கமும், நிறைவும் இருக்குமாயின். அந்த நிறைவு கூடலாக இருந்தால் சுபம். அதுவே ஊடலில் முடிந்தால் வலி மட்டுமே எஞ்சியிருக்கும். ஆனால் அந்த வலி கூட அன்று சுகமானதாக இருந்தது..  நிசப்தத்தை மீறி இளையராஜாவின் பாடல் மனத்துக்குள் மெதுவாக இசைத்துக் கொண்டிருந்தது.. "கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே, கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே.."

" என் கல்யாணத்துக்கு வந்திரு".. 

அவள் குரல் நிசப்தத்தை உடைத்தது.. 

"ஆங்.. சரி".. 

அவள் கண்ணை நேராக பார்க்க முடியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.. 

"உனக்கு எப்போ கல்யாணம்?"

"பாக்கலாம், இப்போதைக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல." 

"கல்யாணம் பண்ணு. நீ ஹெப்பிய இருந்தாதான் நான் என் லாய்ஃப ஹேப்பியா ஆரம்பிக்க முடியும்.. வீட்டில கல்யாணம் பண்ணுன்னு ஒரே டோச்சர். எனக்கும் வயசாகுது. பாத்தேன் நல்ல பையன். நல்லா பாத்துக்கறாரு. சரின்னுட்டேன்."

"தெரில பாக்கலாம்.." இதைவிட வேறு பதில் என் கிட்ட இல்ல. ஓரிரு காதல்கள் என் வாழ்வில் வந்து போயிருக்கின்றன. ஆனால் இவளைக் காதலித்தது போல் வேறு யாரையும் நான் காதலிக்கவில்லை. பிரிந்தும் அவள் ஞாபகம் என்னை விட்டு விலகவில்லை. என்றாவது என்னிடம் பேசுவாளா, காதல் மீளுமா என காத்திருந்தேன். அவளிடம் பேச ஒரு வாய்ப்புக் கிடைந்திருந்தால் இப்படி ஒரு பிரிவு இன்று உருவாகியிருக்காது..

"சிவா".. 

"சொல்லு"

"என்ன? என்ன யோசிக்கிற?"

"ஐம் ஸோரி சக்தி.. உன்ன நான் நெறையா ஹெட் பண்ணிருக்கேன். தெரிஞ்சே அதிகமான வலிய கொடுத்துருக்கேன். நானேதான் உன் கிட்டேருந்து விலகுன்னேன். ஆனா உன்ன மறக்க முடியுலா.. உனக்காக வெய்ட் பண்ண, பேச ட்ராய் பண்ண. ஆனா நீ தெரியாத மாதிரி இருந்த. அவொய்ட் பண்ற மாதிரி பேசன. மூவ் ஒன் பண்ணிட்டியோன்னு நெனச்சேன்.. 

கண்ணீர் ததும்ப அவள் என்னை பார்த்தாள்...

" சிவா.. உன்ன எனக்கு அவ்ளோ புடிக்கும்.. யாரும் என்ன திட்டி பேசன்னா எனக்கு புடிக்காது, ஆனா நீ எவ்ளவோ திட்டிருக்கே ஆனா உன் கிட்ட பேசாமா என்னால இருக்க முடியாது..  நீயே என்ன போ போன்னு சொல்றப்போ உனக்கு என்னை புடிக்கலையோன்னு நெனச்சேன். என்னை நீ புரிஞ்சுகில்லையோன்னு நெனச்சேன். அத மீறி என்னால உன் கிட்ட வர முடியுல."

"ஐம் ஸோரி சக்தி..இத தவிர எனக்கு வேற சொல்ல தெரியுல. என்ன சுத்தி உன் ஞாபகங்கள் நெறையா இருக்கு. என்னிக்கும் அது மாறாது. ஐ லவ் யூ"..

"சிவா.. ஐ ஆல்வேய்ஸ் மிஸ் யூ. இன்னிக்கு உன் கூட இருக்குற இந்த நிமிஷம் முன்னாடியே கெடைச்சிருந்தா, நம்ம லய்ஃப் நமக்கு புடிச்ச மாதிரியே இருந்திருக்கும். இப்போ டூ லேட். எதையும் மாத்த முடியாது.. என்ன அப்பவே நல்லா லவ் பண்ணிருக்கலாம்ல.." 

சிறியதாய் சிரித்துக் கொண்டு அவள் கண்களில் வழிந்த கண்ணிரை துடைத்தாள்..

"ஐம் ஸோரி சக்தி"..

"இட்ஸ் ஒகே. இந்த நாள மறந்துறாதே. சரியா.. நம்ம காதல் ஒரு நிறைவே இல்லாம இருந்துச்சு. என் காதல் நீ எப்ரிஷிட் பண்ணலயோன்னு கூட நெனச்சேன். ஆனா இன்னிக்கு அதுக்கான பதில் கெடைச்சிருச்சு. டெங்க்ஸ் சிவா. இந்த ராத்திரிய என்னால மறக்க முடியாது. நெறைய கண்ணீர்.. நெறைய லவ்..  நம்ம காதலுக்கு ஒரு அழகான கொன்குலஷன் கெடைச்சிருக்கு.. சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டல் ஆகு. நான் உனக்கு எப்பவுமே நல்ல ஃபெரண்டா இருப்பேன்.. டேக் கேர் பண்ணிக்கோ..நான் வரேன்"

தோளை தட்டிக் கொடுத்து வெகுதூரம் நடந்துச் சென்றாள்.. அதுதான் அவளிடம் இருந்து கிடைத்த கடைசி ஸ்பரிசம்.. இனி அவள் எனதல்ல.. ஆனால் அவளோடு உருவான எனது காதல் உயிர் உள்ள வரை மனதில் பதிந்திருக்கும்.. வலியோடு.. ஆனால் அந்த வலி சுகமானது..


ஆக்கம்..
ஸ்ரீ குமரன் முனுசாமி


Comments

Post a Comment

Popular posts from this blog

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!