நம்பிக்கை எனும் நூலைக் கொண்டுதான், வாழ்க்கை எனும் பட்டம் பறக்கிறது. அந்த நூல் பலம் குன்றி இருந்தாலும் சரி, அறுந்து போனாலும் சரி, பட்டத்தின் முடிவு தரை மீதுதான். அதே நம்பிக்கையில தான் சேகர நான் காதலிச்சேன். ஃபேஸ் புக் நட்பெல்லாம் சரி வராதுன்னு யார் யாரோ சொல்லியும், நான் கேக்கல, ஆனா எவ்ளோ ஏமாளியா இருந்துருக்கோம்னு நெனைக்கறப்போ செம்ம காண்டாகுது. காதல் கண்ண மறைக்கும்னு சொல்றாங்கல, அது அத்துனையும் நெஜம். கண்ண மறைக்கும், காத அடைக்கும், எல்லாமே செய்யும், ஆனா அறிவு மட்டும் இருக்காது. ஃபோலோ பண்ணி ரெண்டு நாள்லே, ஃபோன் நம்பர் கேட்டான். ஆளும் பாக்க நல்லாதான் இருப்பான். அதனால யோசிக்காம கொடுத்துட்டேன். அப்புறம் அக்கறையா பேச ஆரம்பிச்சான். யாரும் இல்லாம, அன்புக்கு ஏங்குற மாதிரி என் கிட்ட பேசுனான். நானும், அய்யோ பாவம்னு ஆறுதலா இருந்தேன். ஆறுதலோட நிப்பாட்டிருக்கணும். அத விட்டுட்டு காதலிக்க ஆரம்பிச்சேன். யாரு எவரு, என்ன பண்றான், ம் ம் ம் எத பத்தியும் யோசிக்கல, கேக்கல. கல்யாணம் வரைக்கும் பேசி மொத்த நம்பிக்கையும் சம்பாதிச்சான். சரி இவனதான் கல்யாணம் பண்ண போறும்னு பாத்தா.. ஒரு குண்டா த...
Comments
Post a Comment