நான் கொஞ்சம் கருப்புதான்!



பொண்ணு சரியான கருப்பு.. மாப்பிள்ளை அட்டக்கரேன்னு இருக்காரு.. கரிக்கட்ட கலரு, கருப்பான் பூச்சி கலரு.. மூஞ்சு இருட்டா இருக்கு.. இருட்டுலு உங்க முகம் தெரில... இப்படி பேசனவங்களும் பேசுறவங்களும் இங்கேயும் இருக்காங்க. இந்த சமுதாயத்தில் வளர்ந்தவன் நான், எனக்கு தெரியாதா?. ஆனா ஒரு மக்கள் பிரதிநிதி அப்படி பேசினது கண்டிக்க படணும்தான். ஆனா அதுக்காக நாம கொடுக்குற பதிலடி இனவாதத்தைத் தூண்டிட கூடாது. 

ஆனா ஊனா கோவத்தைக் காட்ட சமூக ஊடகங்களைக் கையில் எடுத்துக்கிறீங்க. தப்பில்ல. உங்கள் கோவத்தைக் காட்ட ஒரு இடம் கிடைச்சிருக்கு.  பயன்படுத்திக்கோங்க முறையாக.  இங்கு குவிஞ்சிருக்கிறது எல்லாம் வளர்ந்து வரும் சமுதாயம். அவங்க பாக்கறதும் கேக்கறதும் கோவமும் குரோதமும் இனவாதமுமா இருந்துச்சுன்னா இது இன்னும் மோசமாவுமே தவிர சரியாவாது. 

நம்ம ஒன்னும் புதுசா அவமானப்படுத்தப் படல. காலகாலமா பாத்துகிட்டு இருக்கிறதுதான். சோ இங்கு நாம கையில் எடுக்க வேண்டிய ஒரே ஆயுதம் "பீயிங் கெத்து".. புரிலையா? எவன் எத சொன்னாலும் நமக்குத் தெரியும் நம்ம மவுசு. அத மனசுல வெச்சுக்கிட்டு கம்பீரமா நடந்து போகணும். வள்ளுவர் சொன்னது போல. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொருத்தல் தலை. மனுஷன் அப்பவே வேற லெவெல்ல யோசிருக்காரு. நீங்களும் தான் யோசிக்கிறீங்க!

கருப்புத் தமிழன் என மார்த்தட்டிக் கொள்கிறவர்கள், நினைவில் கொள்ளுங்கள் கொஞ்சம் வெளுத்த தமிழர்களும் இங்கு இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தமிழர்கள் இல்லை என ஆகாது. கலர வச்சு ஒருவரை அவமானப் படுத்த முடியும் என்பது மூடத்தனம். அதே கலரைத் தூக்கி வச்சு பாகுபாட்டை ஊர்ஜிதப்படுத்துவது மூர்க்கத்தனம். ஏன் சொல்றேன்னா.. நான் கொஞ்சம் கருப்புதான்!..

கடைசியா ஒரு பஞ்ச்.... சூரியனைப் பார்த்து... ஹிஹி பேலேன்ஸ் உங்களுக்கே தெரியும்!.. 

நன்றி வணக்கம்.

-எழுத்து-
ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

கைப்படாத ரோசா

இரட்டை வால் குருவி