கணேஷாகிய நான்..
யாஷுவின் பரிதவிப்ப பார்த்து நானாவது கொஞ்சம் அனுசரணையோடு நடந்திருக்கலாம். இல்ல அதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம். கல்யாணம் மட்டுமே குறியா இருந்த எனக்கு அதோட பிரச்னை என்னன்னு கேக்க தோனல. அதுக்காக யாஷு மேல எனக்கு அன்பில்லன்னு ஆகாது. அது மேலே நான் உயிரையே வச்சிருக்கேன். ஆனா ரெண்டு பேரு சேர்ந்து வாழ இந்த காதல் மட்டும் போதாது. ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு வச்சிருக்கணும். விட்டுக் கொடுக்க தெரிஞ்சிருக்கணும்.
யாஷுவோட மாமா மேலே எனக்கு காண்டு இருந்துச்சுதான். யாஷு அவருக்கூட பழகறத பாக்காறப்போ பத்திக்கிட்டு எரியும். ஆனா அத நான் யாஷுகிட்ட காட்டிருக்கக் கூடாது. ஓவேர் பொசெசிவ்ன்னு சொல்வாங்கல்ல. அதுதான். நமக்கானவ நம்மக்கூடதான் இருக்கணும்னு நெனைக்கிறது தப்பில்ல. நம்மக்கூட மட்டும்தானே இருப்பான்னு நெனைக்கிறதுதான் தப்பு. கூட வாழப் போறவங்க மேலே கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும். அது இல்லன்னா அந்த வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. எனக்கு அவுங்க மாமா மேலே பொறாமைல்லாம் இல்ல...லைட்டா பொறாமைதான்.. பிகாவுஸ் ஐ லவ் யாஷு. ஆனா அதுக்கு அது புரிஞ்சுச்சான்னு தெரில.
நான் கோவக்காரன்தான் ஆனா என் கோவத்துக்குப் பின்னாடி என் காதல் இருந்துச்சு. ஆமா காதல், பின்னாடி இருந்து என்ன பன்றது. முன்னாடில இருக்கணும். பின்னாடி இருந்தாலும் யாஷு என்ன புரிஞ்சுப்பான்னு இருந்துட்டேன். அதுதான் நான் செஞ்ச தப்பு. ஒன்னு சொல்றேன் கேளுங்க. மத்தவங்க எப்படி புரிஞ்சுப்பாங்கன்னு நாம டிசைட் பன்னக்கூடாது. ஏன்னா எல்லோருமே இந்த உலகத்தே வேற வேற மாதிரிதான் பாக்குறாங்க. சோ, அன்பை மனசுல வச்சுக்கிட்ட வார்த்தையில கோவத்தக் காட்டாதீங்க. அது எவ்ளோ நெருக்கமானவங்களா இருந்தாலும் காயப்படுத்திடும். யாஷுவையும் அப்படிதான் நான் காயப்படுத்திட்டேன். நீங்க அப்படிலாம் பண்ணிடாதிங்க!
யாஷுக்கு என்ன பிரச்னைன்னு எனக்குத் தெரில்ல. ஆனா அது என்கிட்டேருந்து எதையோ மறைக்குதுன்னு தெரியும். எனக்கு என்னவோ அதோட மாமா மேலேதான் டவுட்டா இருக்கு. அந்த ஆளு என்கிட்ட பேசன விதத்தப் பாத்த, யாஷுக்கு என்னம்மோ குடைச்சல் கொடுக்கிறாரோன்னு தோனுது. ம்ம்ம் இருக்கட்டும், எல்லா பிரச்னைக்கும் முடிவுன்னு ஒன்னு இருக்கு. அது வரைக்கும் விடைத் தெரியா வினாக்களோட யாஷுவுக்காக காத்திருக்கிறேன்.
கல்யாணுத்துக்கு முன்னாடி நீ யாஷு, கல்யாணத்துக்கு அப்புறம் நீ என் யாஷு!.
அன்புடன்,
கணேஷ்
-எழுத்து-
ஸ்ரீ குமரன் முனுசாமி
செம்ம போங்க..நல்ல கருத்து வெளிப்படுத்துனிங்க
ReplyDeleteஇந்த மாறி எல்லாரும் இருந்தாங்கன...எல்லாருடைய இல்லற
வாழ்க்கையும் சந்தோஷம இருக்கும்...
அதிலும் அந்த வார்தை :-
'கல்யாணுத்துக்கு முன்னாடி நீ யாஷு, கல்யாணத்துக்கு அப்புறம் நீ என் யாஷு!.'
சூப்பர்
Arumaiyaga ungalin kathapattirathai velippaduthuninga..
ReplyDelete