குத்துவிளக்கு குத்தறவிளக்கா?



ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். குத்து விளக்குக்கு ஏன் குத்து விளக்குன்னு பேரு வந்துச்சுன்னு. சிலரிடம் கேட்டா, குத்த வைக்கிறதால குத்து விளக்குங்குறாங்க. சிலர்  ஆன்மீக ரீதியில், குத்து என்றால் அழுத்து. அப்படி அழுத்தி, நமகுள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறதுன்னு அர்த்தம்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இது ரெண்டிலயும் உடன் பாடு இல்லைங்க. அதுக்காக பெரிய அளவுல ஆராய்ச்சியெல்லாம் செஞ்டு தீர்வு ஏதோ சொல்லப் போறேன்னு நெனைக்காதீங்க. ஏதோ என் அறிவுக்கு எட்டன்ன வரை அலசி ஆராய்ஞ்சு சில விஷயங்கள சொல்றேன். அப்புறம் நீங்களே முடிவு பண்ணீக்கோங்க. 

குத்து விளக்குத் தென்னிந்தியப் பகுதியில் சுபக்காரியத்துக்கோ, துக்கக்காரியத்துக்கோ, தவறாமல் பயன்படுத்துற பாரம்பரிய விளக்கு. குறிப்பா தமிழ் நாட்டிலும் கேரளத்திலும். குத்து விளக்கைப் போலவே இருக்குற விளக்குகள் அயல் நாடுகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. பயன் படுத்தவும் படுகின்றன. அதற்காக தமிழன் தான் ஒட்டு மொத்த நில விலக்குகளுக்கும் சொந்தகாரன்னுச் சொல்லல. ஆனால் தொடர்ப்பிருக்கலாம். 

பைசாந்தியப் பேரரசுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நிலவிளக்கு


யாசீதியர்கள்


தாய்லாந்தில் கிடைக்கப்பட்ட பண்டையக்கால் நிலவிளக்கு

ரோமப்புரியில் பயன்படுத்தப்பட்ட நிலவிளக்கு

ஈரானில் யாசீதியர்கள் பயன்படுத்தும் வழிப்பாட்டுச் சின்னம்




தென்கிழக்காசிய நாடுகளில் குத்து விளக்கை மாதிரியான ஒரு விளக்குப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இலங்கையில் இன்றும் குத்து விளக்குப் போன்ற விளக்கு, சேவல் சின்னத்தோடு பயன் படுத்தப்படுகிறது. ஈரானில், மயில் சின்னம் கொண்ட குத்துவிளக்கைப் போன்ற ஒரு வழிபாட்டுச் சின்னம் யசீதி மதத்தினரால் பயன்படுத்தப்படுகின்றது. ஆனா, இது எதுக்குமே காரணப்பெயர் வழங்கப்படுவில்லை. இல்ல குறிப்பிடத் தவறியிருக்கலாம். 


இலங்கை நிலவிளக்கு


கதக்களியில் களிவிளக்கு


கேரளாவில் பயன்படுத்தபடுற "களி விளக்கு" காரணப் பெயரைக் கொண்டிருக்கு. களின்னா நடனம், கூத்துன்னு பொருள். விளக்குன்னா விளக்குதான். ஆக, கூத்துக்குப் பயன்படுத்துற விளக்குங்குறதால களிவிளக்குன்னு அதுக்கு பெயர் வச்சிருக்காங்க. சரி அப்போ தமிழில குத்துவிளக்குங்குறோமே அதுக்கு என்ன அர்த்தம்.  குத்து விளக்கை நில விளக்குன்னும் சொல்றாங்க. பொதுவா பயன்படுத்தப்படாட்டினாலும். அதுதான் குத்து விளக்கு மாதிரியான விளக்குகளுக்குப் பொது பெயர். ஏன் நிலவிளக்குன்னா, நிலத்துல ஊன்றி வைக்கிறோம்ல அதான். 

ஆனா குத்து விளக்குங்குற பேரு எப்படி வந்துருக்கும்? களிவிளக்கை உதாரணமா எடுத்துக்கிட்டோம்னா, களின்னா கூத்து.. அப்போ கூத்து விளக்கா இருக்குமோ. இப்படிதான் எனக்கு தோனுச்சுங்க. கூத்துவிளக்குதான் நாளடைவில் மருவி குத்து விளக்காயிருக்கலாம். பட் தெரில.

எப்படி களிவிளக்குக் கேரளக் கூத்துகளுக்குப் பயன்படுத்தப்பட்டதோ, அதேமாதிரியான நிலவிளக்குத் தமிழர் கூத்துக்குகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போ மின் விளக்கு வந்துருச்சு. ஆனா பழந்தமிழ் கூத்து பிரபலமா இருந்த காலத்தில் ஏதுங்க கரண்டு. கூடுதல் வெளிச்சம் வேணும்னா, அஞ்சு முகங்கள் கொண்ட நில விளக்குத் தேவைப்படிருக்கலாம். கதக்களிக்கும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நாளடைவில் அதுவே பாரம்பரியமா மாறியிருக்கலாம். நாம கூத்தைப் பெருசுப் படுத்துல. ஆனா கூத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலவிளக்கை மட்டும் இது வரைக்கும் பயன்படுத்தி வரோம். அதையாவது பண்ணோமே.

கூத்துக் காட்சி


கூத்துக்குப் பயன்படுத்துப்பட்ட விளக்குங்குறதால, கூத்து விளக்குன்னு கூப்பிட்டிருப்பாங்க. கூத்து நாளடைவில் குத்துன்னு மாறியிருக்கலாம். ஏன்னா எல்லா மொழிகளிலும், ஒலிபிறழ்வு ஏற்பட்ட எக்கசக்கமான சொற்கள் உண்டு. உதாரணத்துக்கு, குல வர்க்கம் என்ற இரு சொற்கள் கெலுவார்கா என்று மாற்றம் கண்டது போல.  தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா?. மொழியைப் பேசும் மக்களின் உச்சரிப்பு, கால ஓட்டம், என பல காரணங்களால், ஒலி சிதைவு அல்லது ஒலிபிறழ்வு ஏற்படுது. அப்படிதான் நெடிலாக இருக்க வேண்டிய "கூ" குறிலாக ஒலிக்கப்பட்டு குத்துவிளக்காக ஒலி மாற்றம் கண்டிருக்கலாம் என்பது என் கணிப்பு.

இது வெறும் கணிப்பு மட்டுமே. எதையும் நான் உறுதிப்படுத்தல. ஏன்னா நான் சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. அதுக்காக எனக்குத் தோனுறத சொல்லாம என்னால இருக்கவும் முடியாது. தமிழ்மொழி என்பது அதை பேசற எல்லோருக்கும் சொந்தமானது. நான் பேசற தமிழ்தான் சிறந்ததுன்னு சொல்ற அளவிற்கு இங்கு யாரும் அகத்தியனும் இல்லை தொல்காப்பியனும் இல்லை. முடிஞ்ச வரைக்கும் தமிழரிடம் தமிழில் பேசுங்க. கத்துக்கிட்டு பேசனீங்கன்னா கொஞ்சம் சுவாரஸ்யம் கூடும். தேடலோடு கத்துக்கிட்டிங்கன்னா போதை ஏறும்..
யாதும் ஊரே யாவரும் கேளிர்!


அன்புடன்,
ஸ்ரீ குமரன. 

Comments

  1. அருமையான கருத்து விளக்கம்... இப்படி அர்த்தம் புரியாமல் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் பல... அதன் அர்த்தம் தேடுவதிலும் சுவாரசியம் தான்... வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அருமையான கருத்து விளக்கம்... இப்படி அர்த்தம் புரியாமல் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் பல... அதன் அர்த்தம் தேடுவதிலும் சுவாரசியம் தான்... வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கைப்படாத ரோசா

மழை நின்ற பின்பும் தூறல்

இரட்டை வால் குருவி